மழலை வரம்

மழலை வரம்

கர்ப்பத்தில் " கரு" மலர் வேண்டி
கர்ப்பை "தரு"வின் காலடியில்
நேர்த்திக்கடன்..!

ஆராரோ ஆரிராரோ தாலாட்டு தொட்டில்
கிண்கிணிகள் சத்தம்
நிலாச்சோறு கிண்ணம்
மழலையின் அழுகுரல்
நினைவூட்டும் தாய்மை.!

ஊராரின் "மலடு" பட்டம்
பட்டு போன்ற மனம்
பட்டுப் போன மரமாகிறது
மாங்கல்யம் கொண்டதில் துணை
மழலையால் வேண்டும் உறுதுணை
எங்கே கடவுளின் கருணை..!

நிறையாத , சுவாசிக்காத அடிவயிறு
மாரியம்மன் கோவில் மண்சோறு
நைவேத்தியம், பாட்டி வைத்தியம்
யாவும் பிள்ளை நிலாவுக்காக...
சித்தம் தினமும் பிராயசித்தம்
புண்ணியங்கள் சேர்ந்து வருமா?
புன்முறுவல் " புதையல்"..!!

கடவுளின் காதில் சொல்லிவிட்டேன்
வேதனையை மௌன பிரார்த்தனையால்
வாரிசு - பரிசு வேண்டுமென...
ஒரு வரம் ரகசியமாக..!!

எழுதியவர் : சகா. கோபி கிருஷ்ணன் (14-Sep-20, 9:30 pm)
Tanglish : mazhalai varam
பார்வை : 68

மேலே