எங்களுக்கு கிடைத்த அம்மா
எங்களுக்கு கிடைத்த அம்மா
அறிவியல் எழுச்சியும்
அம்மாவின் அரவணைப்பும்
என்றும் குறைந்ததல்ல
என்றாலும்
வயது ஐம்பதுக்கு மேல்
இருக்கும்எங்களுக்கு
கிடைத்த அம்மாவுக்கு
எங்கள் கதைகள் கேட்க
நேரமிருந்தது
கை பிடித்து அழைத்து செல்ல
அவளால் முடிந்தது
ஒன்றாய் உட்கார்ந்து
விளையாட நேரமிருந்தது
அம்மா என்று தமிழில்
கொஞ்சி பேச
உரிமை இருந்தது
மாவுரலில் ஆட்டி
வைத்து வரிசை வரிசையாய் தோசை
சுட்டு போட நேரமிருந்தது
வானொலியை அருகில் வைத்தும்
இல்லை குரல் இசையில்
தூங்க வைத்த
திறமை கூட இருந்தது
அறிவியல் வளர்ச்சியும்
அம்மாவின் அன்பும்
குறைந்ததல்ல என்றாலும்
இன்றைய அம்மாக்களுக்கு
இருக்கும் நேரம்
அவளை விழுங்க
காத்திருக்கும்
தொலை காட்சி முதல்
கைபேசி வரை
வறுத்தெடுக்கும்
அலுவலக பணிச் சுமை
எல்லாமே காத்திருக்க
அவள்தான் என்ன
செய்வாள்?