அரசியல்வாதிகளே

அடே அரசியல்வாதிகளே
நிறுத்துங்கள் உங்கள் ஆட்டத்தை !

காலம் காலமாய் செய்துவரும்
களவாணி அரசியலை என்றைக்குத்தான்
நிறுத்தப்போகிறீர்கள் ?

ஊழலால் உடல்பெறுத்த உள்ளங்களே
உயிர்கள் என்ன அவ்வளவு மலிவாகிவிட்டதா ?

தேர்வுக்கு தீர்வென்றால்
தீர்மானம் போட்டு போராட்டமா ?

அடித்தட்டு மக்களின் அவஸ்தைகள்
அவ்வளவு அலட்சியமாகிவிட்டதா ?

ஊக்கத்தை உடைத்து உயிர்பலியில்
ஓட்டுக்களை சேகரிக்கிறீர்களா ?

சில்லறைகளை செலவழித்து
எத்தனை கல்லறைகளை இன்னும் கட்டப்போகிறீர்கள் ?

அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையே
மறைத்து விட்டீர்கள் , மறந்து விட்டர்கள் !

உயிர்களை கொள்ள ஊக்கம் கொடுப்பதற்கென்றே
ஒரு கூட்டம் !

அநியாயத்தை அடிப்படையாக கொண்ட
அரசியல் அத்தியாயம் நீடித்ததாய் வரலாறுகள் இல்லை !

நேர்மையாய் வாழுங்கள் ,
நேர்மறை எண்ணத்தை கூறுங்கள் -
குழம்பிய உள்ளங்கள் தெளிவு பெறட்டும் !

தேர்வோடு வாழ்க்கை முடிவதில்லை என்கிற
தீர்மானத்த்தோடு வாழட்டும் இந்த இளைய தலைமுறை !

எழுதியவர் : விநாயகமுருகன் (14-Sep-20, 10:05 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 125

மேலே