கார்த்திகேயன் திருநாவுக்கரசு - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  கார்த்திகேயன் திருநாவுக்கரசு
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Jun-2020
பார்த்தவர்கள்:  27
புள்ளி:  40

என் படைப்புகள்
கார்த்திகேயன் திருநாவுக்கரசு செய்திகள்

தவறென் றுணர்ந்தே தவறதனைச் செய்யத்
தவறியவர்க் கின்பம் தனமே - தவறாய்
தெரிந்தும் தவறா ததனைத் துணிவாய்
புரிந்தோர்க்குத் துன்பம் துணை.

விளக்கம்:
ஒருவன் தெரிந்தும் தவறுகளைப் பலமுறை செய்தான் என்றால் அவனுக்கு வாழ்வில் நிம்மதி இல்லை. ஒருவன் தவறுகளை அடையாளம் கண்டு செய்யாமல் கடப்பான் என்றால் அவனுக்கு வாழ்வில் என்றுமே இன்பம் தான்.

மேலும்

பொருள் திரட்டிடக் கட்சியுண்டு!
இருள் விரட்டிடக் கட்சியில்லை...

படை குவித்திடக் கட்சியுண்டு!
விடை கிடைத்திடக் கட்சியில்லை...

மதம் சாதிக்குக் கட்சியுண்டு!
அறம் போதிக்கக் கட்சியில்லை...

கொள்ளை அடித்திடக் கட்சியுண்டு!
கொள்கை மதித்திடக் கட்சியில்லை...

அணி வைத்திடக் கட்சியுண்டு!
பணி செய்திடக் கட்சியில்லை...

கறை வேட்டிக்குக் கட்சியுண்டு!
குறை ஓட்டிடக் கட்சியில்லை...

போதை ஏற்றிட கட்சியுண்டு!
பேதை ஏறிடக் கட்சியில்லை...

ஓட்டை வாங்கிடக் கட்சியுண்டு!
நாட்டைக் காத்திடக் கட்சியில்லை...

மேலும்

மனமுள்ளார்க் குண்டாம் மனசாட்சி குற்றம் தினம்செய்வார்க் கில்லை அது

மேலும்

ஐயா... ஐயன் வள்ளுவன் மீது ஐயம் வேண்டாம்... .:) copy paste செய்யும்போது வந்த வினை :) குழலினிதி யாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொற் கேளா தவர். 31-Jul-2020 2:41 pm
குழலினி தியாழினி இங்கே தளை தட்டுகிறதே நண்பரே வள்ளுவர் தளை தட்ட எழுதியிருப்பாரா? 31-Jul-2020 12:23 pm
உங்கள் கருத்து ஏற்புடையதே மிக்க நன்றி 31-Jul-2020 2:08 am
ஐயா.. வணக்கம்.. நீங்கள் குறிப்பிட்டுள்ள உதாரணம் பெரும்பாலானோர் குறள் புரிவதற்காக இப்படி புணர்ச்சியை பிரித்து பதிவிடுகிறார்கள். இது பெரும் தவறு. உண்மையில் வள்ளுவர் எழுதிய அசல் குறள் கீழே... அதில் குற்றியலுகரம் தவிர்க்கப் பட்டிருக்கும். குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் 30-Jul-2020 11:00 am

வெற்றி வெறியை பற்றவைத்துதோல்வித் துயரில் மூழ்கடித்துஅறத்தினையே மறக்கச் செய்துவாழ்வு முழுதும் ஓடவிட்டுஉயிர் உறிஞ்சும் உண்மைதனைஅறிவுடையோர் புரிந்து கொண்டால்நிம்மதி என்றும் நிச்சயமே!

மேலும்

உயிரை இனிதில் உடம்பில் உறைய
துயிலை விழியும் உணவை - வயிறும்
நிறையும் வகையில் தழுவி மகிழும்
முறையை அறியவேண் டும்.

விளக்கம்: நெடுநாள் உயிரோடு இன்பமாக வாழ்வதற்கு நிறைவான தூக்கமும் உணவும் என்றும் சீராக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.

மேலும்

உன் விஞ்ஞானத்தை வியந்து விண்மீன்கள் கண்சிமிட்டுமா!?

உன் கல்வியைக் காற்று கற்றுக்கொள்ளுமா?

உன் சினத்தில் சூரியன் சிவப்பாகுமா?

நீ பறப்பதைக் கண்டு பறவைகள் புழுக்கம் கொள்ளுமா!?

உன் இல்லத்தின் எழிலில் தூக்கணாங்குருவி ஏக்கம் அடையுமா?!

மொத்தத்தில் உன் பெருமைக்கு எருமை கூட பொறாமைப் படப் போவதில்லை!!!

மேலும்

நன்றி நண்பரே! 22-Jul-2020 10:40 pm
கருத்து வேற்றுமையில்லா தரமான வரிகள் . நல்ல கவிதை . ...ம்ம் ..யார் மீதும் கோபமில்லையே கவிஞரே ? .. 22-Jul-2020 10:26 pm
கார்த்திகேயன் திருநாவுக்கரசு - S UMADEVI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jul-2020 5:19 pm

இது தான் உலகம்

கண நேரத்தில்
எரிந்து போன
தீக்குச்சியின்
தியாகத்தை விட
நின்று எரியும்
திரிகளின் தியாகங்களே
பெரிதும் பேசப் படுகின்றன
தீபங்களால்!

சு.உமாதேவி

மேலும்

பள்ளிகள் கொள்ளையர்களின் கூடாரமானபின்
கல்விகள் கடைச்சரக்கானதில் கவலைப்படவொன்றுமில்லை!

மருத்துவமனை மரணத்தின் துணையென்றானபின்
மருந்துகள் விஷமானதில் வியப்பொன்றுமில்லை!

கோயில்கள் கொடியவர்களின் கைவசமானபின் கடவுள்கள் கல்லானதில் கற்பனையொன்றுமில்லை!

நோட்டில் நாட்டம் உள்ளவர்கள் நாட்டை ஆண்டபின்
நீதிகள் நிலைகுலைவதில் பீதியொன்றுமில்லை!

ஊடகம் உண்மையில் ஊமைகளானபின்
கேள்விகள் காணாமற்போனதில் கேளிக்கையொன்றுமில்லை!

மனிதர்கள் வாழஆசையின்றி ஆசைக்குவாழ்ந்தபின்
மிருகங்களாக மாறியதில் மிகையொன்றுமில்லை!

மேலும்

நன்றி திரு பன்னீர் செல்வம் அவர்களே! 11-Jul-2020 8:42 am
உண்மை ... நிதர்சன உண்மை . சிறப்பான படைப்பு . 10-Jul-2020 10:44 pm

கொடுப்பதைக்கெ டுப்பதும்கெ டுப்பதைக்கொ டுப்பதும்
வஞ்சத்தை மிஞ்சும் வினை.

விளக்கம்:
பிறருக்கு உதவுவதைத் தடுப்பதும் பிறருக்கு கெடுக்கும் பொருளைக் கொடுப்பதும் தீய எண்ணமான வஞ்சத்தை விட கொடிய எண்ணம்

மேலும்

வீடு முதல் காடு வரை
கருவிகளின் துணையுடனே
காற்றினிலே கரைந்து வந்து
நிம்மதியை ஒழித்துக்கட்டும்!

உண்மைதனை ஊமையாக்கும் விந்தையான வித்தை கொண்டே பை நிறைய கையை நீட்டி
கேட்பவனைக் கிறுக்கனாக்கி
படிப்பவனை மடையனாக்கி
பார்ப்பவனைப் பதரச் செய்யும்
நாளுக்கொரு நிறமிருக்கும்
பொய் மையிலே செய்தி செய்தாய்!

நாடறியும் மூடர்களை
சான்றோரின் வேடத்திலே
தானியற்றும் நாடகத்தில்
ஊரார்க்குப் பாடஞ்சொல்வாய்!

முதலைக்கொண்ட முதலாளியின்
முதலைப்பசிப் போக்கிடவே
நஞ்சனைத்தும் அமிர்தமென்று இடைவெளியில் இடைவிடாது
நயமுடனே நடிகர்கொண்டு
விளம்பரத்தில் விதைத்திடுவாய்!

கட்டுக்கட்டாய் நோட்டை ஈட்ட
போட்டி போட்டுக் கூட்டம் சேர்த்து மேட

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே