பாரியின் பந்து

"இது என்னோடது..."

"இல்ல... இல்ல... இது என்னோட பந்து..."

வழக்கம்போல் பாரிக்கும் சாரிக்கும் நடக்கும் சண்டை தான் இது! பெரும்பாலும் பாரி எடுத்து வரும் பொருட்களை, சாரி தனதென்று சொந்தம் கொண்டாடி வம்பிழுப்பது வழக்கம்.

அது பந்து விளையாடும் சீசன் என்பதால் இப்போது சாரி அந்தப் பந்தை தன்னுடையது என்று தினமும் வம்பிழுத்தான்.

அண்மையில் வந்த ஒருவன் அந்த சண்டையை சில நாட்களாக கவனித்து வந்தான். ஒருநாள் பாரியிடம் சென்று, அந்தப் பந்து பார்ப்பதற்கு மிகவும் பழசாகவும் அசிங்கமாகவும் இருக்கிறது என்றும், அது பாரியினுடையதாக இருக்க முடியாது என்றும் பலவாறு பேசி வந்ததால் ஒருநாள் பாரியே சாரிக்கு அந்தப் பந்தை கொடுக்கும்படி செய்துவிட்டான்!

"இந்தா... உன் பந்தை நீயே வைத்துக்கொள்..."

ஒருநாள் பந்து விளையாடும் சத்தம் கேட்டு பாரி வெளியே வந்து பார்த்தபோது சாரியும் அந்தப் பையனும் குதூகலமாக அந்தப் பந்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். பாரி அவர்கள் விளையாடுவதை பரிதாபமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

புதிதாக வந்தவனின் பெயர் ராமசாமி!

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (22-Sep-21, 6:53 pm)
Tanglish : paariyin panthu
பார்வை : 130

மேலே