‌‌

காஃபியை கொண்டு வந்து மேஜையில் நறுக்கென்று வைத்தாள்.அவன் தலையில் கொட்டியது போலிருந்தது.ஏன் அவளுக்கு அத்தனை கோபம்.பேனாவை தாளில் வைத்துவிட்டு காஃபியை ஊதினான்.சுமார் பத்து வருடங்கள் அவன் இப்படி தான் "கதையும் கையுமாக" அலைகிறான்."பைசாவுக்கு பிரயோனமிருக்கா" மனைவியின் கூச்சல்.மேஜையில் சிந்திய ஒரு துளி காஃபியை ஈக்கள் மொய்த்தன.துளியும் அந்த காபியில் சக்கரையே இல்லை.இருந்தும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன...

எழுதியவர் : S. Ra (22-Sep-21, 1:29 pm)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 48

மேலே