நீவந்து சென்ற என் தெரு
===========================
தைலக்காரன் வந்துபோனதை
தாத்தா பாட்டி வாசத்திலும்
காய்கறிக்காரன் வந்துபோன
சோகத்தை அம்மாவின் புலம்பலிலும்
,
வளையல்காரன் வந்துபோன விபரத்தை
தங்கையின் கரங்களிலும்
,
மிட்டாய்காரர் வந்துபோன
மகிழ்ச்சியைக் குழந்தைகளின் முகத்திலும்
கடன்காரர் வந்துபோனதை
அப்பாவின் கடுப்பிலும் காணும் நான்
நீ வந்து போன விபரத்தை
இருள் சூழ்ந்திருந்த
என் தெரு ஒளிர்வதில்
தெரிந்துகொள்கிறேன்
**
மெய்யன் நடராஜ்