கோமாளி

மயிருக்கெல்லாம் மையைவைத்து மகிழ்ந்திருப்பான்...
நாளுக்கொருப் புகைப்படத்தைத் தெருவில் வைப்பான்...
தன்முகத்தை தனைமறந்தே ரசித்திருப்பான்...
உடைகள்கண்டே உறவுகொள்ள முனைந்திருப்பான்...
பெருமைக்கென்றே பொருள்குவிக்கப் பறந்திருப்பான்...
பணத்தைக்கண்டால் பக்கம்சென்று பல்லிளிப்பான்...
பிராண்டில்மட்டும் பாசம்வைத்து பார்த்திருப்பான்...
பயன்கருதி பலவகையில் பழகிவைப்பான்...
கழுத்தினிலே நகையணிந்து நகைத்திருப்பான்...
புத்தகத்தை புரட்டாமலே கதையடிப்பான்... தனிமையிலும் தலைவனென்றே தனைநினைப்பான்... எப்பொழுதும் சத்தமாகக் கத்திடுவான்...
உறக்கத்திலும் உரக்கமாக உளறிவைப்பான்...
பெரியகடவுள் காக்குமென்று வாக்களிப்பான்...
விஞ்ஞானத்தை வியந்துவியந்து விளக்கிடுவான்... டாக்டரைபோய் பாருயென்றே புத்திசொல்வான்...
தனக்குமட்டும் தெரியுமென்று அறிவுரைப்பான்...
பிறர்கவரக் குரலெழுப்பி கூப்பிடுவான்...
தவறுசெய்தும் வருத்தமின்றி வலம்வருவான்... கற்றவரின் மத்தியிலும் கருத்துசொல்வான்... விளம்பரத்தில் விருப்பம்கொண்டே வினைப்படுவான்... பொழுதுபோக்கை பொதுநலமாய்ப் புரிந்திடுவான்...

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (1-Oct-21, 10:25 am)
பார்வை : 94

மேலே