நெருப்பு ஆறு
வாழ்வென்பது ஓர் புரியாத புதிர் -
எதிர்பார்ப்பிற்கும் எதார்த்தத்திற்கும்
வித்தியாசம் அதிகம் ............
கனவுகளையும் கற்பனைகளையும்
பலநேரங்களில் போலியாக்கி இருக்கிறது வாழ்க்கை ................
நடக்குமென்பது நடக்காமல் போவதும்
நடக்காதென்பது நடத்தி காட்டுவதும் வாழ்க்கையின் விசித்திரம் ...............
அதுவழியில் இதோ எனது வாழ்க்கை .............
காலத்தின் பிள்ளையாய் பிறந்து
கட்டுக்கோப்பான வாழ்க்கையில் வளர்ந்தும்
எதார்த்த வாழ்க்கை என்னை
எங்கோ இட்டுச்சென்று விட்டது ................
நேர்மையாய் வாழ்ந்தும்
நேர்மையற்ற இந்த சமுதாயம்
என்னை நம்பிக்கை துரோகத்தால் வீழ்த்தி இருக்கிறது .............
நெருக்கடியான பொருளாதாரத்தில் சிக்கி
என் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கியது விதி .............
ஏமாற்றியவர்கள் எவ்வளவோ இருந்தும்
ஏமாற்றியவன் என்கிற பட்டத்தை
ஏமாளியாய் சுமக்கிறேன் நான் ...............
அறியாத மனிதனாய்
சூழ்ச்சியின் சூழலில் சிக்கி
இழந்ததின் வரிசையில் மானம் , மரியாதை , நிம்மதி இன்னும் பல .............
தொலைத்தவற்றை தொலைத்த இடத்திலே தேடினாலும்
என் வாழ்க்கை தொலைதூரம் கடந்துவிட்டது என்பதே உண்மை ............
அசிங்கம் அவமானம்
என அனைத்தையும் சகித்துக்கொண்டு வாழ்தலும் கூட
நெருப்பாற்றில் நீச்சலிடும் ஒரு நெடும் பயணம்தான் .................
என்னவென்று சொல்ல ,
காலம் இட்ட கட்டளையை யார்தான் மறுக்க முடியும்
இறைவனின் ஆசியோடு எதிர்நீச்சல் போடுகிறேன் ,
நெருப்பாற்றிலும் கூட !!!!!!!!!!!!!!!!!