நான் யார்

நான் யார் ? என்று என்னைக் கேட்டப் பொழுது என் மனம் கூறியது... பிறர் செய்யும் தவறுகளுக்குச் சதி என்பாய்... நீ செய்யும் தவறுகளுக்கு விதி என்பாய்… வீசப்பட்ட ரோஜாவாக முள்ளில் சிக்கித் தவிக்கிறாய்... உனக்கு நீயே வேலி போட்டு உள்ளச் சிறையில் முடங்கிக் கிடக்கிறாய் !! வடுக்கள் நிறைந்த வறியவனின் வாழ்கையை வருமையினின்று மீட்க வலிமையில்லா ஆளுமை நான்
என்னை கொன்றுவிடுங்கள்!! என்று பிதற்றிக்கொண்டிருக்கிறாய். என் வாழ்நாளின் வெறுமை ஓரு நாள் பெருமையாகும் என்று உன்னை நீயேத்தெற்றிக் கொண்டு என்னையும் அந்நியர் அநீதி கண்டு மனமே அழாதே நீ ஆனால் அழுது விடு அன்பிற்கு இனியவர்களை இழக்கையிலே'' என்று தன்னம்பிக்கைத் தருகிறாய்.. நான் உனக்கு உரைக்கிறேன் நேர்மைக்கு நேர்மை பக்கபலமாகும்.. கயமைக்கு கயமை துரோகம் செய்யும்.. கூட்டம் கண்டு ஆடாதே... தனியாளென்று எண்ணாதே உன்னை.... உனக்குள் ஒரு பிரபஞ்சம்... அதற்கு நீயே அரசி... உன்னை ஆளும் திறன் உனக்குள்ளும் இருக்கிறது... அதுவே உன்னை ஆள்கிறது... சோகம் மட்டுமே வாழ்க்கைக் கிடையாது... சுகமாகவே எந்நாளும் வாழ்ந்து விடவும் முடியாது... ஆத்திரம் கொண்டு உன் அமைதியை நீ இழக்காதே!! என் பிரியமானவளே என்று என் மனம் என் உணர்வுகளை உரக்கச் சொல்லிச் சென்றது.

✍🏻 பாக்யா மணிவண்ணன்.

எழுதியவர் : பாக்யா மணிவண்ணன். (4-Aug-20, 11:23 pm)
சேர்த்தது : பாக்யா மணிவண்ணன்
Tanglish : naan yaar
பார்வை : 141

மேலே