கற்றல் அதனை பற்றுதல்
விடியும் முன்பே எழுந்து இசையுடன் இரை தேட தொடங்கும் பறவைகளிடம்
அதிகாலையில் எழுந்து கடமையை செய்ய வேண்டுமென்ற
கற்றலை கற்றுக் கொள்கிறோம்
தன் ஒளியினால் அனைத்து ஜீவன்களுக்கும் உயிர் தரும் சூரியனிடமிருந்து
தன்னை போல் பிறரையும் உயிர் காக்க வேண்டுமென்ற
கற்றலை கற்றுக் கொள்கிறோம்
மரம் செடி கொடிகள் எல்லாம் தன்னையே உணவாக தருவது போல்
நாமும் தன்னை போல் பிறரையும் வாழ வைக்க வேண்டுமென்ற
கற்றலை கற்றுக் கொள்கிறோம்
எதிர்வரும் பிரச்சனைகள் ஆயிரம் வந்தாலும் - அவற்றை எதிர்கொண்டு
முறியடித்து வெற்றிவாகை சூடும் தைரியத்தை
தேய்பிறையாக தேய்ந்தாலும் மனம் தளராமல் வளர் பிறையாய் வளர்ந்து அழகாய் பிரகாசிக்கும் குளிர்சந்திரனிடமிருந்து
கற்றலை கற்றுக் கொள்கிறோம்
காலையில் எழும் பொழுதே ஒரு கற்றல்
கனவிலும் ஒரு கற்றல்
உணவிலும் ஒரு கற்றல்
நீரிலும் ஒரு கற்றல்
நெருப்பிலும் ஒரு கற்றல்
பூங் காற்றிலும் ஒரு கற்றல்
புயலிலும் ஒரு கற்றல்
பூகம்பத்திலும் ஒரு கற்றல்
இடி மின்னல் மழையிலும் ஒரு கற்றல்
இன்னலிலும் ஒரு கற்றல்
இன்பத்திலும் ஒரு கற்றல்
வறுமையிலும் ஒரு கற்றல்
வளமையிலும் ஒரு கற்றல்
அகிலமே நமக்கு ஆசானாகி அனைத்திலும் அனுதினமும் பலவிதமான கற்றலை கற்றுத் தருகிறது - அவற்றை அறிவினால் அறிந்து பகுத்தறிவுடன் பற்றிக்கொண்டு வாழ்ந்தால் வளமும் வாழலாம்!!!