பூட்டிய உன் மனதை எப்போது எனக்காய் திறப்பாய் என்னவனே

அமைதியான என் மனதில்
அலைபாயும் உன் நினைவுகளால்
கலங்கி தவிக்கிறேன் நான்
நீயோ அமைதியாய் இருப்பது எதனாலோ
பூவான என் மனதை
உன் புன்னகையினால் கலைத்துவிட்டு
உன் மனதை மட்டும்
பூட்டிக் கொண்டது எதனாலோ
பூட்டிய உன் மனதை
எப்போது எனக்காய் திறப்பாய் என்னவனே
என் காதலை திறவுகோலாய் கொண்டு
உன் கரம் பிடித்து வாழ காலமெல்லாம் காத்திருக்கிறேன்
பூட்டிய உன் மனதை என் காதலால் ஏற்று திறந்து பூவான என்னை உனக்குள் சூடிக்கொள் என்னவனே !!!

எழுதியவர் : M. Chermalatha (11-Feb-25, 12:00 pm)
சேர்த்தது : M Chermalatha
பார்வை : 3

மேலே