முரண்பாடு தவிர்த்து உடன்படு

முரண்பாடு தவிர்த்து உடன்படு
*************************************
பணம் எதற்கு யென்பான்
பகட்டான சோம்பேறி
குணம் எதற்கு யென்பான்
கூடி வாழத் தெரியாதவன்

வரம்புகள் மீறிய
வலிய உணவினை
எறும்புகள் கடத்தியே
இருப்பிடத்தில் சேமிக்கும்
எதற்காக சிந்திப்பிர்..

ஓரிரு நாட்கள்
உயிர்வாழும் கரையான்கள்
உடலில் சிறுத்தாலும்
உன்னதமாகக் கட்டும்
வீட்டைப் பாரீர்‌ ..

பகுத்துண்டு வாழும்
காகத்தின் நற்பண்பு
காலங்கள் கடந்தும்
மாறவில்லை காண்பீர்..

யாதும் ஊரே யாவரும் கேளிர்
சமத்துவ புறா ஞான அ பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (10-Feb-25, 5:08 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 71

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே