என்னிடம் உரைப்பாயா

உன் வண்ண
சிறகுகளை அசைத்து
கைதேர்ந்த விமானியாக
உன் எண்ணப்படி
நிழலின்
கொடையாக மாற்றி
கண்டம் விட்டு கண்டம்
நாடு விட்டு நாடு
அலைகடலின் மேலே
மேகங்களின் ஊடே
உறக்கத்தை தொலைத்து
உணவை தொலைத்து
ஓய்வின்றி நாளும்
புலம்பெயரும் அழகிய
பறவையே
உன் உழைப்பின் இரகசியம்
என்னவென்று சற்று
என்னிடம் உரைப்பாயா....

எழுதியவர் : உமாபாரதி (10-Feb-25, 2:39 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 21

மேலே