விண்வெளி விஞ்ஞானி
நிஹார்... அவர்
சூரியனை ஆராய்ச்சி
செய்யும் சந்திரன்..
இவர் பொறியியல்
படித்தது திருநெல்வேலி..
புவியியல் முதல்
மின்காந்தவியல் வரை
அறிவாற்றல் வளர்ப்பதில்
இவருக்கென்ன வேலி..
வானவியலை உள்ளடக்கிய
மின்னணுவியலின் தோழி..
பூமிக்கும் சூரியனுக்கும்
ஈர்ப்பு விசையே இல்லாத
இடம் லக்கிராஞ்சி புள்ளி..
அது சூரியத் தூரத்தில்
ஒரு சதவீதம்.. அதன்
விண்வெளித் தகவல்கள்
இவரிடம் இருக்கும்
நூறு சதவீதம்..
ஆதித்யா எல் ஒன்றை
அங்கு நிலைநிறுத்திய
கணக்கு வழக்குகள்
இவருக்கு அத்துப்படி...
அதை இங்கு சொல்லியாக
வேண்டும் உள்ளது உள்ளபடி..
நிஹார்.. அது
உலகமெங்கிலும் உள்ள
விண்வெளி விஞ்ஞானிகள்
அறிந்த பெயர்..
ஒரே கல்லூரியில்
நம்முடன் படித்தவர்
என நினைக்கையில்
மனதுக்குள் ஒரு ஃபயர்..
😃🤝👍