ஏதாவது சொல்லி விடுவார்கள்
ஏதாவது சொல்லி விடுவார்கள் என,
இருவரும்
கவனத்தோடு இருப்போம்.
தனிமை கிடைக்கும் போதெல்லாம்
நிறைய பேசிக் கொள்வோம்,
இருக கைபிடித்தபடி….
அவன் மடியில் தலை வைத்தபடி…..
சில பொழுதுகளில்
அவன் உதடுகள் மறைந்து கொள்ளும்
என் உதடுக்குள்…,
கடைசிவரை
இப்படியே வாழ்வோம்
என கதைத்தபடி சந்திப்பு முடியும்.
நாள்கள் சென்றன
மீனாட்சியை அவனும் காமாட்சியை நானும்
திருமணம் செய்து கொண்டோம்,
ஏதாவது சொல்லி விடுவார்கள் என.

