செந்தில் வளவன் பி - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : செந்தில் வளவன் பி |
| இடம் | : சோழவரம் |
| பிறந்த தேதி | : 28-Nov-1977 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 30-Jun-2021 |
| பார்த்தவர்கள் | : 340 |
| புள்ளி | : 125 |
சமூக செயல்பாட்டாளர், கவிஞர்,ஆசிரியர் தொழிற்சங்கம், விமர்சகர்.
இதை மட்டும்
வெளியில் சொல்ல முடியாது
மனம் மட்டும் உள்ளே இருந்து சொல்லும்
அவனும் இவனும்
ஒன்றாவார்கள்
இரவில் மட்டும்
காலைப்பொழுது
பொதுவாய் பயணிக்கும்
உலகை இயல்பில்
நீ செய்யும் சேட்டைகள் பிடிக்கும்
பேருந்து பயணத்தில்
ஜன்னல் ரகளைகளில் மூழ்கி இருப்போம்
எனக்கு மட்டும் நீ என
பலமுறை சொல்லிக் கொள்வோம்
சில சந்தர்ப்பங்கள்
நம் நிஜத்தை காட்டும்
எனக்கும் பல
உனக்கும் பல
இருந்தும்
நாம் இருவரும்.
ஏதாவது சொல்லி விடுவார்கள் என,
இருவரும்
கவனத்தோடு இருப்போம்.
தனிமை கிடைக்கும் போதெல்லாம்
நிறைய பேசிக் கொள்வோம்,
இருக கைபிடித்தபடி….
அவன் மடியில் தலை வைத்தபடி…..
சில பொழுதுகளில்
அவன் உதடுகள் மறைந்து கொள்ளும்
என் உதடுக்குள்…,
கடைசிவரை
இப்படியே வாழ்வோம்
என கதைத்தபடி சந்திப்பு முடியும்.
நாள்கள் சென்றன
மீனாட்சியை அவனும் காமாட்சியை நானும்
திருமணம் செய்து கொண்டோம்,
ஏதாவது சொல்லி விடுவார்கள் என.
இரவு நேர விளையாட்டில்
எனக்கு மட்டும் தெரியும்
அவன் பதுங்கும் இடத்தில் பதுங்க
ஐந்து பேர் ஒன்றாய் பதுங்க
ஒன்றன்பின் ஒன்றாய்
முட்டிக்கொள்ள
அவன்,
என் பின் இருக்கவே விரும்புவேன்.
அவனது உரசலில் அழுத்தம் அதிகமாகும்
கண்டுபிடித்த மதன்
அழைப்பான்
குமார்,சுதாகர்,
அவுட்…
#பூமியில் கால் பதித்தேன் - மூன்றாவதும் ஆண் பிள்ளையா, ஆஹா ஓஹோ என்றார்கள்!
#வளர தொடங்கினேன் - தந்தையின் தொழில் முடக்கம், பிறந்த நேரம் சரியில்லை என்றார்கள்!
#படிக்க பள்ளி சென்றேன் - பணம் சம்பாரிக்க படிப்பெதற்கு, வட்டிக்கடை போதும் என்றார்கள்!
#படிப்பிற்கேத்த வேலை தேடினேன் - அன்றே சொன்னேன் அறிவில்லை என்றார்கள்!
#கிடைத்த வேலையில் சேர்ந்தேன் - 8000 சம்பளத்தில் என்ன சாதிக்க போகிறாய் என்றார்கள்!
#உறவுகளுடன் பேச துவங்கினேன் - ஒன்றுமில்லாதவன் ஒட்டி வருகிறான் என்றார்கள்!
#உறவுகளிடம் இருந்து விலகி நின்றேன் - வெட்டி கௌரவம், வீணாய் போகட்டும் என்றார்கள்!
#எழுந்து நின்றேன் - வளர்ச்சி வந்ததும் தலைக்கனம்
யார் கண்டுபிடித்தது?
சொற்களை.
வாய்க்குள் உருண்டை போல் சுழல்கிறது...,
ஊசியாய்,
அம்பாய்,
நாற்றமாய்,
அணுகுண்டாய்,
கொல்கிறது....,
சில நேரங்களில்,
மலராய் வெல்கிறது!
மண்ணைச் சுட்டால் செங்கல்லாகும்
மண்ணில் கல்லைக் கொட்டினால்
மண்ணும் விளைச்சல் இன்றியே மலடாகிடும் ---- (1)
தென்னங் காயையும் பிஞ்சினில்
தின்னும் வகையில் பறித்திட்டால்
நன்மை தந்திடும் மருந்தாகி உடல்காக்கும் ---- (2)
நெல்லை நீரினில் ஊறவைத்து
கொல்லையில் தூவிடின் முளைக்கும்
எல்லின்றி எதுவும் பிழைக்குமோ உலகினிலே ---- (3)
வட்டத்தின் சரியாய் பாதிபகுதி
விட்டம் எனவே கொள்ளப்படும்
வெட்டப் பட்டால் அதுவும் வட்டமில்லையே ---- (4)
உயிர்கள் மீதினில் அன்புடைய
உயர்ந்த எண்ணம் கொண்டோரால்
பயிரென ஆனதே சிறந்த மருத்துவம் ---- (5)
கடவுள் என்கிற எவருமே
உடலினைக் கொண்டே உலகிலில்லை
தடையில்லா உழை
இளைப்பாற
இடம் தேடி,
அலைந்த பறவை ஒன்று
அமர்ந்தது மரத்தில்
நடுகல்!!!
அருமை தெரியாமல்
புதிய புத்தகத்தின் வரவால்;
பழைய புத்தகங்கள்!!
வீசப்பட்டன,
முதியோர் இல்லத்தில்...
நடுநிசி தேவதைகள், இரவுப் பசியின் தேவைகள். உடல் பசிக்குப் பந்தி விரிக்க, அறுசுவை தேடலில் எஞ்சியது, உவர்ப்பு மட்டும். உவர்ப்பும் ருசியாய் நக்கிச் செல்லும் சகல நாய்கள், பகல் நேர நாயகன்கள்.
தென்னம் ஓலை விழும், குறிப்பிட்டத் தெருக்களில் மட்டும். போட்டி போட்டு வரிசையில் நிற்கும் சீர் தட்டுகள். பூப்பெய்த நந்தினிக்கு மட்டும் சடங்கு. நீச்சு தட்டும் வாடை இல்லை, சந்தன குளியல் ஆனந்தமாய். நானும் அவளும் ஒரே வகுப்பு பள்ளியில், நானும் அவளும் ஒரே வயது வருகைப் பதிவில். நானும் அவளும் ஒரே வரிசை, அமர் கையில், நானும் அவளும் ஒரே நாளில் பூப்பெய்தோம்...! மெல்லப் புரிந்தது அனிதாவிற்குப்