தீட்டுத்துணி

தென்னம் ஓலை விழும், குறிப்பிட்டத் தெருக்களில் மட்டும். போட்டி போட்டு வரிசையில் நிற்கும் சீர் தட்டுகள். பூப்பெய்த நந்தினிக்கு மட்டும் சடங்கு. நீச்சு தட்டும் வாடை இல்லை, சந்தன குளியல் ஆனந்தமாய். நானும் அவளும் ஒரே வகுப்பு பள்ளியில், நானும் அவளும் ஒரே வயது வருகைப் பதிவில். நானும் அவளும் ஒரே வரிசை, அமர் கையில், நானும் அவளும் ஒரே நாளில் பூப்பெய்தோம்...! மெல்லப் புரிந்தது அனிதாவிற்குப் புரிந்தும் என்ன செய்ய. இன்னும் இருக்க,
முடைநாற்றம் பிரிவினைகள். முட்டிக்கொண்டு வந்தது, முதல்நாள் ஈரம் வெறுப்புடன். நந்தினியை நினைத்தபடி மூக்கைப் பொத்திக்கொண்டு எடுத்துப்போட்டேன் துடைத்துக் கொண்ட எனது தீட்டுத்துணியை...., மடித்து வைத்தேன் அடுத்த துளி சிந்தாமல் இருக்க. மெல்ல தெரிந்தது அனிதாவிற்கு தெரிந்தும் என்ன செய்ய கழிப்பறைக்குள் தெரியும் ஜனநாயகத்தை குருதி வாடை......,

எழுதியவர் : சோழ வளவன் (2-Jul-21, 8:55 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
பார்வை : 89

மேலே