தென்னங் காயையும் - கலித்தாழிசை
மண்ணைச் சுட்டால் செங்கல்லாகும்
மண்ணில் கல்லைக் கொட்டினால்
மண்ணும் விளைச்சல் இன்றியே மலடாகிடும் ---- (1)
தென்னங் காயையும் பிஞ்சினில்
தின்னும் வகையில் பறித்திட்டால்
நன்மை தந்திடும் மருந்தாகி உடல்காக்கும் ---- (2)
நெல்லை நீரினில் ஊறவைத்து
கொல்லையில் தூவிடின் முளைக்கும்
எல்லின்றி எதுவும் பிழைக்குமோ உலகினிலே ---- (3)
வட்டத்தின் சரியாய் பாதிபகுதி
விட்டம் எனவே கொள்ளப்படும்
வெட்டப் பட்டால் அதுவும் வட்டமில்லையே ---- (4)
உயிர்கள் மீதினில் அன்புடைய
உயர்ந்த எண்ணம் கொண்டோரால்
பயிரென ஆனதே சிறந்த மருத்துவம் ---- (5)
கடவுள் என்கிற எவருமே
உடலினைக் கொண்டே உலகிலில்லை
தடையில்லா உழைப்பே கடவுளின் உருவமாம் ---- (6)
பூதங்கள் ஐந்திற்கும் உணவில்லை
வேதங்கள் எவற்றிக்கும் வித்தில்லை
பேதங்கள் பேசியே வீழ்வதும் வீண்தானே ---- (7)
எதையும் கற்றிடு தரமானதாக
கதைபேசி உலாவும் மனிதரின்
உதவியை நாடிடும் போதுனில் உதவுமது ---- (8)
வீணர்கள் தலைமைப் பதவியைக்
காணுவது என்பது காலக்கோலம்
பாண்டில் வாசிக்கும் குடைமடக்கியே நல்லவராம் ---- (9)
படிப்பினில் கவனம் மிகக்கொண்டு
துடிப்புடன் இருக்கும் எவருக்கும்
அடிப்படை வாழ்வின் முறையில் தெளிவடையும் ---- (10)
------ நன்னாடன்.