ஊர் வாய்

#பூமியில் கால் பதித்தேன் - மூன்றாவதும் ஆண் பிள்ளையா, ஆஹா ஓஹோ என்றார்கள்!
#வளர தொடங்கினேன் - தந்தையின் தொழில் முடக்கம், பிறந்த நேரம் சரியில்லை என்றார்கள்!
#படிக்க பள்ளி சென்றேன் - பணம் சம்பாரிக்க படிப்பெதற்கு, வட்டிக்கடை போதும் என்றார்கள்!
#படிப்பிற்கேத்த வேலை தேடினேன் - அன்றே சொன்னேன் அறிவில்லை என்றார்கள்!
#கிடைத்த வேலையில் சேர்ந்தேன் - 8000 சம்பளத்தில் என்ன சாதிக்க போகிறாய் என்றார்கள்!
#உறவுகளுடன் பேச துவங்கினேன் - ஒன்றுமில்லாதவன் ஒட்டி வருகிறான் என்றார்கள்!
#உறவுகளிடம் இருந்து விலகி நின்றேன் - வெட்டி கௌரவம், வீணாய் போகட்டும் என்றார்கள்!
#எழுந்து நின்றேன் - வளர்ச்சி வந்ததும் தலைக்கனம் வந்தது என்றார்கள்!
#காதல் வயப்பட்டேன் - குடும்ப கஷ்டம் உணர்ந்து பிழைத்துக்கொள் என்றார்கள்!
#எழுத துவங்கினேன் - எல்லாம் பிழைகள் என்றார்கள்!
#இவை அனைத்தையும் முகநூலில் பதிவிட்டேன் - Like வாங்க பாடுபடுகிறான் என்றார்கள்!!!
அறிவுரை சொல்லி
ஆகுலம் நீக்க வேண்டிய
இந்த உலகம்
ஈடாய்
உன்
ஊன்
எரியும் வரை
ஏளனமாய் தான் பேசும், எதற்கும்
ஐயம் கொண்டு
ஒருக்காலும்
ஓடிவிடாதே, யாரை பார்த்தும்
ஒளவியம் கொள்ளாதே
ஃ-முடிவில் ஜெயிப்பது நீ தான்!!!
ஊர் வாய் கேளாது,
உன் மனம் காட்டும்
பாதையில் பயணித்துப்பார்,
அன்றொரு நாள்
நல்ல நித்திரை கிடைக்கும்!!!

$®!

எழுதியவர் : ஸ்ரீனிவாசன் (19-Jul-21, 6:07 pm)
Tanglish : oor vaay
பார்வை : 77

மேலே