மாத சம்பளம்
:
#30நாட்களின் அயராத உழைப்பிற்கு கொடுக்கப்படும் மாபெரும் விருது - மாத சம்பளம்!
#நம் உழைப்பில் வரும் மாத சம்பளத்திற்கு,
இலவசமாய் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது!
#Corporate முதலாளிகளின் (முதலைகளின்) நம்பிக்கை - ஒவ்வொரு தொழிலாளியின் மாத சம்பளம்!!!
#மாத விடாயாய் தள்ளி போகிற சம்பள தேதி தரும் வலிகள் ஏராளம்!
#சம்பள தேதி அன்று வரும் குறுஞ்செய்திகள் அனைத்தும் உடனுக்குடன் open செய்து பார்க்கப்படுகிறது! ஆனால், மிஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே!!!
#ஆசைகள் அதிகமாகிக்கொண்டே நகரும் நாட்கள், சம்பளம் வந்த பின்னர் உணர்த்துகிறது ஆசைகள் அவசியமற்றது என்று!
#4நாள் விடுமுறை எடுத்தபோது ஆனந்தமாய் இருந்தது, சம்பளத்திற்கு எமனாய் வந்து நின்றான் LOP என்ற பெயரில்.
முடிவு செய்தேன் இனி விடுமுறைக்கு விடுமுறையே விட கூடாதென்று!
#சம்பளம் வந்த தினம் பௌர்ணமியாய் தெரிந்தது, வளர்பிறையாய் தேய்பிறையாய் பல உருவம் பெற்று அமாவாசையில் மறையும் முழு நிலவைப்போல் மறைகிறது மாத இறுதியில்!
#சம்பளம் வந்ததும் Treat என்ற பெயரில், நீரில் கலந்த உப்பாய் கரைகிறது, ஆனால், மாத இறுதியில் Treat என்ற வார்த்தை கூட நினைவில் இருப்பதில்லை!
#சோப்பு, சீப்பு போன்ற அன்றாடம் பயன்படுத்தப்படும் அத்யாவிசய பொருட்கள் அனைத்தும் சம்பள தேதி அன்றே வாங்கப்படுகின்றன!
#Credit card, Debit card, EMI மூலம்
எளிதாய் கடன் வாங்கும் தைரியத்தை கொடுக்கும் நீ, அதை திரும்பி செலுத்த முயற்சிக்கும் போது முட்டுக்கட்டை போடுவது என்ன நியாயம்???
இன்று பலரின் நிலை இதுவே....
4,000 சம்பளம் வாங்கிய போதும் சரி,
40,000 சம்பளம் வங்கியபோதும் சரி -
பணம் பற்றாகுறையாகவே இருக்கிறது.
அப்படி என்றால் பிரச்சனை சம்பளத்தில் இல்லை, அதை செலவு செய்யும் நம்மிடமே இருக்கிறது!
மாத கடைசி கற்றுத்தந்த சிக்கனத்தின் எல்லையை, மாதம் முழுதும் கடைபிடித்திருந்தால் சம்பள தேதிக்காக காதிருக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது!
#சேமிக்க கற்றுக்கொள்ளுங்கள் - செலவு குறையும்...
#ஆசை கொள்ளுங்கள் - பேராசையை கொல்லுங்கள்!
#பணத்தை சம்பாரிப்பது மட்டும் வாழ்க்கை இல்லை....
பணம் வெறும் காகிதம் தான் அதை மட்டுமே வாழ்க்கையாய் நினைத்து ஓடாதீர்கள்!
நல்ல பல மனிதர்களையும் நினைவுகளையும்
சம்பாதிக்க கற்றுக்கொள்ளுங்கள்...
#தேவையை விட பணம் அதிகமிருந்தாலும்,
ஆடம்பரத்தை தவிர்த்து,
பிறரிடத்தில் அன்பை பகிர்ந்து,
ஆனந்தமாய் வாழ கற்றுக்கொள்ளுங்கள்!!!
வாழ்க்கை இனிதாய் அமையும்!!!
#Waiting for that moment!
Your #Salary has been credited in your Account...
$®!