மத்திய சிறை மனச்சிறையானது
"காதலன் : அன்பே, நான் உன்னைக் காதலிக்க என் மனச்சிறையில் அடைத்தேன். ஆனால், நீயோ உன் தந்தையிடம் சொல்லி என்னை மத்திய சிறையில் அடைத்து விட்டாய் அது ஏன் அன்பே !
காதலி : அன்பே, நீ என் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாய் என்று உன் மனச்சிறையில் சென்று காண முடியாது. அதனாலேயே நான் உன்னை மத்திய சிறையில் அடைத்தேன்.
(காதலனை அவன் காதலியும் காதலிப்பதற்கான நேர்மறையான உறுதி மொழியை காதலனுக்கு உரைக்கும் விதமாக கவிதையின் பதில் இருக்க வேண்டும். இது நான் கல்லூரியில் படித்த போது தமிழ் பேராசிரியர் கொடுத்த கேள்விக்கு பதிலாக நான் உரைத்தது)