தழுவாத முத்தங்கள்
அந்தி நேரம்
இருவர் யுவதிகள்
போட்டிப் போட்டுக்கொண்டு
எனை கீழே விழுந்துவிடாமல்
தாங்கிக் கொள்கிறார்ரகள்
ஒரு யுவதி இதமாக முத்தமிடுகிறாள்
இன்னொரு யுவதி
ஆக்ரோஷமாக முத்தமிடுகிறாள்
ஆனாலும் எனை கீழே
விழுந்துவிடாமல்
தாங்கிக் கொள்கிறார்கள்
நான் வேறாருமில்லை
இலகுவான இறகுப்பந்து...
*✍🏿 கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்*