சேர்ந்திடு இறைபதம்
சேர்ந்திடு இறைபதம்..!
26 / 04 / 2025
உரக்க சிந்தித்து சேயலாற்று
உறக்கம் தொலைத்து முன்னேறு
புத்தியை சீவி கூராக்கிடு
பார்வையை குவித்து சீராக்கிடு
தடங்கல் தாண்டி போராடு
தடங்கள் பதித்து வாகைசூடு
அலைகளில் நீந்தி கரைசேரு
மலைகளை உடைத்து பொடியாக்கு
சொல்வது சுலபம் செய்வது கடினம்
சொல்லை செயலாக்கி - இந்த
வாழ்வினை நீயும் வென்றிடு.
வாழ்க்கை ஒரு பரமபதம்
வாழ்ந்து பின் சேர்ந்திடு இறைபதம்.