ருக்கு ருக்கு

ருக்கு ருக்கு
04 / 08 / 2025

ஆண்: ருக்கு ருக்கு ருக்கு
அரே பாபா ருக்கு
ஓ..மை டார்லிங்

பெண் : அப்பா

ஆண்: ப்யாரி ஜானு
கிவ் மீ எ லுக்கு
ருக்கு..ருக்கு..ருக்கு..
ஓ மை ஜானு
கிவ் மீ எ லுக்கு

குழு: ஓ ஹோ பேஷ்

ஆண்: ருக்கு ருக்கு ருக்கு

பெண் : வானுக்குள்ளும் இருப்பான்டி
வாழ்விலும் நிறைவான்டி
நம்பி கையில் நிற்பான்டி
தனிமையை தீர்ப்பான்டி
உள்ளங்கையில் உலகையே
கொண்டுவந்து சேர்ப்பான்டி
குழப்பங்கள் வந்தால்
இருக்குது கூகுள்
உள்ளே நுழைந்தால்
விடையெல்லாம் கைக்குள்
நல்ல நட்புதான்
இந்த கைபேசி
என்றும் கையோடும்
வாழ்வோடும் வந்தாடும்
துணையல்லவா

ஆண் :தனித் திறமை போயாச்சு
அடிமையாத்தான் ஆயாச்சு
தனிமை இங்கு
நிலை ஆச்சுதான் ஆ..ஆ..
நிஜம் மறந்து போயாச்சு
நிழல் நிறைந்து இருளாச்சு
உறவெல்லாம் மறைந்து
சருகாச்சு
இளஞ்சர்கள் வாழ்க்கை
டேமேஜ் ஆனது
முதியவர் வாழ்க்கை
பூஜ்யம் ஆனது
கரியாச்சுதான்
அப்பன் காசுதான்
வந்தாலும் போனாலும்
வழக்காகும் வாழ்வல்லவா
தரிகிட தரிகிட
தரிகிட தரிகிட

ஆண் : அதிகாலை எழுந்ததும்
வாட்சப் ஸ்டேட்டஸ்
நாள்முழுதும்
பேஸ்புக் இன்ஸ்டாதான்
ஆயிரம் பிரெண்ட்ஸ் இருந்தாலும்
ஆளுக்கு ஒரு உலகம்னு
ஆதிவாசியாய் வாழ்க்கை
அவசரமாய் உண்டாச்சு லவ்வு
அடுத்த நாளே
லவ் ஒடஞ்சி ப்ரேக்கப்பு
எதை சொன்னாலும்
ஏற்காது டொண்ட்கேர்
பறந்திட துடிக்குதே
ப்ரீ பேர்ட்
அடி போக போக
அப்பன் பேச்சு புரியும்

ருக்கு ருக்கு

பெண் : இஷ்டம்போல் வாழ
நினைப்பது தவறா?
மனம்போல் சிறகடித்து
பறப்பது குறையா?
ஆண் :எல்லைத்தாண்டி போக
நினைப்பது சரியா?
மானம் மரியாதை
இழப்பது முறையா?
பெண் : அய்யய்யோ ஏன்
இந்த வேண்டாத போட்டி
சொல்லுங்க அப்பா
ஆண் : லைஃபுக்கு பார்ட்னர்தான்
வேணும் அது உயிருள்ள
ஆளாத்தான் வேணும்
50 50 ஆக்கிவெச்சா
இனிக்கும்
வானுக்குள்ளும் இருப்பான்டி
வாழ்விலும் நிறைவான்டி
நம்பி கையில் நிற்பான்டி
தனிமையை தீர்ப்பான்டி
உள்ளங்கையில் உலகையே
கொண்டுவந்து சேர்ப்பான்டி
குழப்பங்கள் வந்தால்
இருக்குது கூகுள்
உள்ளே நுழைந்தால்
விடையெல்லாம் கைக்குள்
நல்ல நட்புதான்
இந்த கைபேசி
என்றும் கையோடும்
வாழ்வோடும் வந்தாடும்
துணையல்லவா

( ருக்கு ..ருக்கு பாட்டின் பாதிப்பில்
என் கிறுக்கல் )

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (13-Aug-25, 7:27 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : ruku ruku
பார்வை : 16

மேலே