இந்தியம்

இந்தியா என்பது வெறும் நாடல்ல-அது
இந்தியத்தை ஈன்றெடுத்த பெரும் வீடு

இந்தியம் என்பது வெறும் சொல்லல்ல-அது
இணைந்திப்போம் என்றுரைக்கும் கோட்பாடு

எத்தனை எத்தனை மொழிகள் பேசினாலும் இங்கு
அத்தனையும் தாண்டி ஒற்றுமை தான் ஆட்சி மொழி

வண்ண வண்ண உடையிருக்கும் உணவிருக்கும் மக்கள்
எண்ணம் யாவிலும் இந்தியம் தான் குடியிருக்கும்

எண்ணிக்கையில் அதிசயங்கள் பல இருப்பினும் இந்தியா
இவ்வுலகத்தில் இருப்பதே பேரதிசயசம்.

இந்தியம் காப்போம் என்றும் இணைந்தே இருப்போம் !!

எழுதியவர் : Hemandhakumar (17-Aug-25, 1:34 pm)
சேர்த்தது : ஹேமந்தகுமார்
Tanglish : inthiyam
பார்வை : 16

மேலே