மே தினக் கவிதை
⚒️⚒️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️
*மே தினக் கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️
#மே_தினம் சிறப்புக் கவிதை
உழைப்பாளிகள்
உலகக் கலைக் கூடத்தை
தன் உழைப்பால்
"கட்டும் கலைஞர்கள்...!"
பொருளாதாரத் தோட்டத்தை
வேர்வை நீரால்
வளர்க்கும் "தோட்டக்காரர்கள்... !"
உழைப்பாளிகளின்
கஷ்டம் என்னவென்று
"காப்பு காய்த்தக்" கைக்கும்
உப்பு படிந்த உடம்புக்கும் தவிர
வேறு யாருக்குத்
தெரிந்து விடப்போகிறது.....?
அவர்கள்
மானத்தைக் காப்பாற்ற
போதுமான
ஆடையில்லை என்றாலும்.....
இந்த தேசத்தின்
மானத்தைக் காப்பாற்றும்
"மேலாடை " அவர்கள் தான்...
அவர்கள் வீட்டின்
மேற்கூரை ஒழுதாலும்....
நாட்டின் மேற்கூரை ஒழுகாமல்
இருப்பது
அவர்களால்தான்....
அவர்களின் பசிக்கு
போதுமான அளவு
உணவு கிடைக்காவிட்டாலும்...
இந்த தேசமக்களின்
பசிக்கு
போதுமான உணவுகளை
கிடைக்கச் செய்வது
அவர்கள் தான்..
பூமி அச்சின் மீது
சுழல்வது எல்லோருக்கும்
தெரியும்....
ஆனால்
அந்த "அச்சிதான்
இந்த உழைப்பாளிகள்" என்று
எத்தனை பேருக்கு
தெரியும்........?
இவர்களுடைய
வேர்வைகள் தான்
இந்த தேசத்தை
"தூய்மைப்படுத்துகிறது....!"
இவர்களுடைய
விழிப்புகள் தான்
இந்த தேசத்தை
"அமைதியாக
உறங்க வைக்கிறது.....!"
இவர்களின்
"குனிவுகள்" தான்
இந்த தேசத்தை
"நிமரச்" செய்கிறது.....
இவர்கள்
தோள்களில் சுமப்பது
சுமைகளை அல்ல
இந்த தேசத்தைத்தான்....!"
இவர்கள்
உடம்பில் இருக்கும்
"உப்புக்க(ள்)ல் தான்
இந்த தேசத்திற்ககு
"சுவையூட்டுகிறது....!"
பாட்டாளிகளைப் பற்றி
கவிதையில்
சொல்ல முயற்சி செய்வது....
"கடலைக்
குடத்துக்குள்" அடைக்க
முயற்சி செய்வதாகும்.....
உலக வரைபடத்தில்
இருக்கும் கோடுகள் எல்லாம்
உழைப்பாளிகளின்
வறுமைக் கோடுகளோ....?
மாடாய் உழைத்து
ஓடாய்த் தேய்ந்தாலும்
இவர்கள்
உழைப்பு மட்டும்
என்றும்
"களைப்பதே" இல்லை....
செய்வதற்கு என்றும்
"சலிப்பதே!" இல்லை .....
உழைப்பாளி
இல்லை என்றால்
குண்டூசி முதல்
வைரம் வரை
இந்த உலகில் ஏது..?
மே முதல் நாள் தான்
உழைப்பாளிகள்
"உயர்வாக
மதிக்கப்படுகிறார்கள்.... !"
மற்ற நாட்களில்
"மனிதனாகக்" கூட
மதிப்பதில்லை......
செய்யும் தொழிலே !
தெய்வம் என்று
பட்டுக்கோட்டை சொன்னார்...
ஆனால்
நாம் அதையெல்லாம்
கோட்டை விட்டுவிட்டு....
செய்யும் தொழிலின்
அடிப்படையில்
"ஜாதிகளை" உருவாக்கி
மனிதர்களுக்கு
இடையே பாகுபாடுகளை
உருவாக்கியுள்ளோம்....!
இனியாவது
உழைப்பாளிகளை
"தெய்வமாக "
மதிக்காவிட்டாலும்
"மனிதனாக" மதிப்போம் !
மனிதர்களாக நடப்போம் !
♥அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்♥
*கவிதை_ரசிகன்*
🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️