அறியாத வேதனைகள்
அறியாத வேனைகள்
பூத்து குலுங்கும்
பூக்களின்
புன்னகையில்
வேர்களின் வேதனை
என்னவோ
தெரிவதில்லை
காய்த்து தொங்கும்
கனிகளின்
கவர்ச்சியில்
அதை சுமந்து
நிற்கும் கிளைகளின்
துயரங்கள்
தெரிவதில்லை
பச்சிளம் குழந்தை
பிறந்த பரவசத்தில்
பத்து மாதம் சுமந்து
திரிந்த
தாயின் வயிறு
ஞாபகத்தில் வருவதில்லை
சுவையின் சுகத்தில்
மயங்கும் நாக்குள்ள
மனிதர்க்கு
சமைத்தலின் சிரமங்கள்
புரிவதில்லை
கற்று தேர்ந்த
பிள்ளைகளின்
எண்ணத்திலோ
பெற்றோர் துயரம்
உணர்வதில்லை