முகம் கழுவி விட்டு வந்திருக்கிறாள் போலிருக்கிறது

முகம் கழுவி விட்டு வந்திருக்கிறாள் போலிருக்கிறது..!

முகம் அலம்பி
வந்தவளின்
முக கன்னங்களில்
முத்துக்களாய் நீர்
துளிகள்
உருண்டு திரண்டு
உதிர்ந்து விழ
தயாரான நிலையில்…!

காதோர முடிகளின்
கரம் பற்றி
தொங்கி கொண்டிருக்கிறது
மிச்சம் மீதி
தண்ணீர் துளிகள்

இமைகளின்
விளிம்பு மயிர்கள்
கூட திடீரென
பூத்து விட்டது போல்
திவலைகளை
நுனியில் தேக்கி
விறைத்து நிற்கிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (8-Aug-25, 3:25 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 36

மேலே