செஞ்சும் வீணையும் செவ் வாழி பண்ணும்- சங்க கால ஒரு மன்னனும் அவன் காதலி உரையாடல் -கவிதை வடிவில்

ஏனடிக் பெண்ணே இன்று நீ இசைக்கும்
வீணை செஞ்சமாய் மாறியது போல
சோக கீதம் இசைக்குதே என்றான் காதலன்
அதற்கவள் மொழிந்தாள் " மன்னவா நீ நாளை
என்னை விட்டு நாட்டைக் காக்க உந்தன்
சேனையுடன் போருக்கு செல்லப் போகிறாய்
இதை அறிந்து உணர்ந்த என்னுள்ளம் உன்னை
மகிழ்விக்க என்னதான் முயன்று மீட்டாலும்
என்வீணை என்னுளத்தின் பிரதி பிம்பமாய்
சோக ஸ்வரங்கள்தான் மீட்டுகின்றனவே
மன்னவா போருக்கு போகத்தான் வேண்டுமா என்றாள்
மன்னன் அதற்கு " எந்தன் உயிர் காதலியே
நீ எந்தன் உயிர் யென்றால் என் மண்ணும் மக்களும்
எனக்கு உயிக்குமேல் உயிரல்லவா ?
நீ இப்போது உன் வீணையில் கொஞ்சம் "செவ்வாழி பண்
கூட்டி இசைப்பாயடி என் மனதில் தென்றலென்ன வந்து
உன் காதலாய் என் காதில் இசைக்க அதுவே நாளை
எனக்கு வெற்றி வாகை ஈண்டு தந்திடவே " என்க
அவளும் அதற்கிசைந்து அவ்வண்ணே வாசித்தாள்
இப்போது அவர்கள் மன்றத்தில் ஓடி வந்தது
தென்றல் காதல் ஏந்தி இருவரும் இன்புற்று இருக்கவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (13-Aug-25, 5:38 pm)
பார்வை : 18

மேலே