பூவிதழ் தன்னிலே ஆவின்பால் புன்னகையோ

கோவில் சிலையோநீ குங்குமம் சிந்திய
பூவிதழ் தன்னிலே ஆவின்பால் புன்னகையோ
தாவிடும் தென்றல் தழுவிடும் கூந்தலை
நீவி நடந்திடும் நீலவிழிப் பேரெழிலை
காவியத்தில் யாக்கவோ சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Apr-25, 9:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 40

மேலே