நினைவெல்லாம் வானவில்லாய் நீ

மனதினில் வீசியது மாலையிளம் தென்றல்
புனைந்திடச் சொன்னதோர் பூங்கவிதை தன்னை
உனைநினைத்தேன் உள்ளே உணர்வு சிலிர்க்க
நினைவெல்லாம் வானவில்லாய் நீ

எழுதியவர் : கவின் சாரலன் (28-Apr-25, 5:45 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 29

மேலே