ஒற்றை ருபாய் காதல்

வண்ண வண்ண உடை,
ஒல்லியான இடை,
சத்தமில்லாத அவளது நடை!!!
வெள்ளி ஒட்டியாணம்,
வாய் நிறைய புன்னகை,
அவள் பேசும் மொழி!
பளபளக்கும் மேனி,
காற்றில் பறக்கும் தாவணி,
காகிதத்தால் ஆன காதணி!
தித்திக்கும் எச்சில் ருசி,
ஒற்றை நூல் ஆடை,
புத்துணர்ச்சி தரும் அவள் வாசனை!
இப்படியான அவள் அழகை ரசித்துக்கொண்டிருந்தான்!
ஆனால், அவளோ
இஸ்லாமிய பெண்ணாக
புர்கா அணிந்து எப்போதாவது எட்டிப்பார்ப்பாள்,
வெட்கப்பட்டு ஒளிந்துகொள்வாள்!
சில காலம் அவளும் இவனை விரும்பினாள்,
கிடைத்த வரத்தை வீணடித்து
விரையம் செய்தான்!
வாழ தெரியாதவனுக்கு
வாக்கப்பட்டு என் செய்வேன், என்று
விதிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டாள்!
தொட்டு தீண்ட நினைத்தான், இல்லை
கட்டியணைத்து முத்தமிட நினைத்தான், இல்லை
தொலைவில் நின்று பார்த்திட நினைத்தான், அதுவும் இல்லை!!!
போதும், அவள் இல்லாத இந்த பூமி
பயனற்றதாய் எண்ணி,
மண்ணுக்கு இரையாகினான்!
அவள் வளர்த்த காதல்
இவன் நெற்றியில்
ஒற்றை ரூபாயாக உடன் வந்து சேர்ந்தது!
அவன் விரும்பி - வெறுத்து - விரும்பும்,
❤️காதலி❤️
"₹பணம்₹"
$R!

எழுதியவர் : ஸ்ரீனிவாசன் (19-Jul-21, 5:51 pm)
சேர்த்தது : SRINIVASAN
பார்வை : 44

மேலே