விலைமதிப்பில்லா தூக்கம்

பத்துக்கு பத்து அறையில் பந்தாவாக,
கட்டில் மெத்தை போட்டு,
காலுக்கு தலையணை போட்டு,
காத்தாடி இரண்டு போட்டு,
ஜன்னல் கம்பிகளுக்கு கொசுவலை பூட்டி,
எலக்ட்ரிக் கொசுவத்தி ஏற்றிவைத்து,
புதுப்போர்வை போத்திக்கொண்டு,
ஒய்யாரமாய் படுத்த போதிலும்
பாதி இரவு கைபேசியுடன் கழிய
மீதி இரவு கொசுக்கடியுடன் கழிய
புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கமில்லை!!!
இவை எதுவும் இல்லாமல்,
ரோட்டோர பிளாட்பார்ம்களில்
குப்பைகளின் கூடாரத்தில்,
அட்டை பெட்டியை மெத்தையாக்கி,
பொத்தல் கோணியை போர்வையாக்கி,
அழுக்கு மூட்டையை தலையணையாக்கி,
கடனாய் பெற்ற கால்வாசி கொசுவத்தியுடன்,
கால்மேல் கால் போட்டு,
கவலையின்றி தூங்கும்
பலரது தூக்கம் விலைமதிப்பற்றது...
$®!

எழுதியவர் : ஸ்ரீனிவாசன் (19-Jul-21, 5:47 pm)
சேர்த்தது : SRINIVASAN
பார்வை : 59

மேலே