சாதியில்லை பேதமில்லை
ஒரு புள்ளி விவரம்,
புதிதாய் இருந்தது,
காதலித்து ஏமாற்றும்
பெண்களின் எண்ணிக்கை
குறைந்திருக்கிறதாம்..
வாழ்க்கையில்
நல்லது நடக்க
எல்லா வாய்ப்புகளும்
இருந்தாலும்
எதுவும்
நடப்பதில்லை
கெட்டது நடக்க
எந்த வாய்ப்பும்
இல்லாவிட்டாலும்
ஏதாவது
நடந்தே தீரும்...
முதல் வரியில்
வந்த புள்ளி விவரம்
எனக்கு
கை கொடுக்கவில்லை.
சரி...
போனா போவுது,
நானும் உன்னை
காதலிக்கிறேன்
என்று அவள்
சொன்ன போது,
எனக்குத் தோன்றியது.
"ஹை ஜாலி"
அடுத்த வாரமே,
எனக்கு
சிங்கப்பூர் ல
வேலை கிடைச்சிருக்கு
என்று அவள்
எனக்கு மட்டும்
சொல்லவில்லை.
சொல்லாத போதும்,
எனக்குத் தெரிந்து விட்டது,
"ஐயோ,
முடிந்தது ஜோலி..."
அவள் போன பிறகு,
சிறு புன்னகையோடு
சொல்லிக் கொண்டேன்,
"நம்ம பசங்களுக்கு
கடைசியா கை குடுக்குறது
அரசாங்கம் தான்!"
அதாங்க,
அரசாங்கம் நடத்தும்
டாஸ்மாக்.
போன வாரம்,
ஒரு கவிஞனிடம்
என் சோக கதையைச்
சொன்னேன்,
அப்புறம் கேட்டேன்,
"எனக்கு வேலையில்லை ன்னு
விட்டுட்டு போனாளா,
அல்லது
அந்தஸ்தா
அல்லது
சாதியா?"
கவிஞன்
சொன்ன பதில்
காதலனுக்கு
கடுமையான விஷம்.
ஆனால்
அதை தெரிந்து கொள்வதற்கு முன்,
முதல் வரியில் வந்த
புள்ளி விவரத்தின்
முழு விவரம்,
காதலித்து ஏமாற்றும்
பெண்களின் எண்ணிக்கை
50 சதவீதத்தில் இருந்து
49.99999 சதவீதமாக
குறைந்திருக்கிறது...
(உங்க பத்திரிகை,
ஊடக தர்மத்தில்
தீய வச்சு கொளுத்த)
கவிஞன் சொன்னது,
"காதலுக்கும்
கல்யாணத்துக்கும் தான்
ஜாதி மதம், அந்தஸ்து
தேவைப்படுது.
ஏமாறுவதற்கு
அது தேவையே இல்லை...
ஏமாற்றத்துக்கு ஜாதி, மதமில்லை "

