கீழடி அறிக்கையை காலடியில் போடாதே கவிஞர் இரா இரவி

கீழடி அறிக்கையை காலடியில் போடாதே! கவிஞர் இரா. இரவி !

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றிய முதல் இனம் தமிழினம்

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே
இரும்போடு வாழ்ந்திட்ட இரும்பு மனிதன்

கீழடி என்பது தமிழர்களின் தொன்மை வரலாறு
கீழடி அறிக்கையை உலகம் அறிய வேண்டும்

வெளியிட்டு அரசிதழில் அச்சிட வேண்டும்
வீண்காலம் கடத்துவதை உடன் நிறுத்திட வேண்டும்

அமர்நாத் இராமகிருஷ்ணன் தொல்லியல் அலுவலர்
அளித்த அறிக்கை அப்படியே வெளியிட வேண்டும்

திருத்தச் சொல்லி கேட்பது கேடான செயல்
திருத்த முடியுமா? பிரேத பரிசோதனை அறிக்கையை!

இடமாற்றம் செய்து இன்னல் பல தந்தபோதும்
இன்முகத்துடன் உறுதியாக உள்ளார் அமர்நாத் அறிஞர்

மிரட்டலுக்கு பயந்து மாற்றி இருப்பர் வேறு சிலர்
மிடுக்கோடு மாற்றிட முடியாது என்கிறார் வீரர்

புராண புழுகான சரஸ்வதி நதியை
பாய்ந்து வந்து ஏற்பது என்பது மடமை

காந்தி தேசத்தில் உண்மையை மறைக்கலாமா?
கட்டாயம் கீழடி அறிக்கையை வெளியிட வேண்டும்

தமிழரின் வரலாறு தொன்மை ஏற்க மறுப்பதேன்
தமிழருக்கு எதிராகவே என்றும் செயல்படுவதேன்!

கீழடி அறிக்கையை காலடியில் போடாதே!
கீழடிக்காக தமிழர்களைப் போராடத் தூண்டாதே!

•••••

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (4-Aug-25, 8:52 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 11

மேலே