வயது ஒரு விசயமல்ல

வயது
ஒரு விசயமல்ல..

மனதால்
என்றும்
இளமையாகவே இருக்க முயற்சிப்போம்..!

எப்போதும்
மதிப்புமிக்கவராய்
உணர்வோம்!

நமக்காக
இங்கே
நாம் மட்டுமே!

நமக்கானதை
நாமே
செய்து கொள்வோம்..

நமக்கான
ஆதரவு
நம்மிடமிருந்தே
தொடங்கட்டும்..

நமக்கான
முதல் கைதட்டல்
நம்மிடமிருந்தே
இருக்கட்டும்...!

மனித
உணர்வான அன்பு
நம்மிடமிருந்தே
பிறக்கட்டும்....

பிறருக்கு கொடுத்து
உதவும் பண்பு
நம்மிடமிருந்தே
உருவாகட்டும்.....

என்றும் நமக்கான
பாதையில் முட்களை
தகர்த்தெறிந்து
பயணிப்போம்......

எழுதியவர் : உமாபாரதி (9-Feb-25, 2:52 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 34

மேலே