கைபேசிக்கு அடிமையான இளைய தலைமுறை

நாம்
மனங்களோடு உறவாடாமல்
கைபேசியோடு உறவாடுகிறோம்
வாசிப்பையும் நேசிப்பையும்
மறந்துவிட்டோம்
கண்ணுக்கு தெரியாத
உறவுகளோடு
கைகோர்த்து விட்டோம்
எந்த பயணங்களும்
சிறப்பாக இருப்பதில்லை
செவியில் பொறிகளை
இணைத்து
கண்ணை மூடியபடி
பக்கத்து இருக்கைகளின்
பக்கம்கூட திரும்புவதில்லை
குறுநகைகூட மறந்து
வேற்று கிரகவாசியாக
வேரற்றமரம் போல
நாமே இப்படி என்றால்
நம் சந்ததியை
எண்ணிப்பாருங்கள்
அவர்களின் எதிர்காலம்
விடை தெரியாத
வினாக்களாக இருக்கிறது
தலைமுறைகள்
தழைத்தோங்க
புதுமைகளையும்
பழமைகளையும்
சொல்லித்தாருங்கள்
பீசா, பர்கரை மறந்து
நம் தானிய குதிர்களை
சேமிப்பின் அருமையை
சேதமற சொல்லுங்கள்
கல்வி மட்டுமே
கரையில் சேர்க்கும்
அன்பு மட்டுமே
மனங்களை ஆளுமென
இன்ன பிறவற்றையும்
சொல்லுங்கள்...
அவர்களின் எதிர்காலம்
அவர்கள் கையில்
என்பதை உணர்த்துங்கள்...