பாதையில் ரோஜா விரித்தேன்
நடையினில் நாணம் நயனத்தில் நீலம்
கடையெழுவள் ளல்தம் கருணை பொழிநெஞ்சம்
காதல்முல் லைப்பூப்பூந் தேராய்நீ யேவந்தாய்
பாதையில்ரோ ஜாவிரித் தேன்
----இரு விகற்ப இன்னிசை வெண்பா
நடையினில் நாணம் நயனத்தில் நீலம்
கடையெழுவள் ளல்தம் கருணை --கடைவிழி
காதல்முல் லைப்பூப்பூந் தேராய்நீ யேவந்தாய்
பாதையில்ரோ ஜாவிரித் தேன்
---இரு விகற்ப நேரிசை வெண்பா