சாக மறுக்கும் காதல் 💔

இதழ்மொழிகள்
இறந்த பின்னும்
வாய்ந்த காதல்,
வழிநடையில்
தங்கிவிடும்
விழி நடையில்
தேங்கிவிடும். தீண்டாத விரல்கள்
இணைந்த கரங்களாய்
இன்னும் நினைத்துக் கொள்கின்றன
நாள்தோறும்
நடனம் செய்கின்றன. கேட்காத பெயருக்கே
நிமிர்ந்து நிற்கும்
என் இதயம்,
உன் பெயரைக்
கேட்டாலும்
உடனே உருகும்
ஒரு உதயம். பேசவே பேசாத பார்வையை மறக்கவில்லை என்றாலும் நீ
பிரியாமல் பிரிந்த
காதலை
எரிக்கவில்லை. இடையே இணைப்பு சிதைந்தாலும்,
அதன் ஓருபாதியில்
நான் வாழ்ந்து கொள்கிறேன்.
மறு பாதியில்
வீழ்ந்து கொள்கிறேன். தொலைந்த நொடிகளில்,
உன்னை
என்றும்
நேசிக்கிறேன்
தவறிய தவணைகளில்
சில கடிதங்களை மறுபடியும் வாசிக்கிறேன். நினைவு வந்த
நேரத்தில்
பிரிவு வந்து
தாங்கிக்கொண்டது,
பிரிவு வந்த நேரத்தில் நினைவு மட்டுமே தங்கிக் கொண்டது. காலத்தால்
அழிக்க முடியாத
சிறு புன்னகையை,
நேரத்தால்
நெருங்க இயலாத
ஒரு பிரிவு
தகர்த்து விட்டது. நீ எழுதிய புத்தகத்தில்
என் அத்தியாயம்
முடிந்து விட்டது.
நீ முடித்த அத்தியாயம் என் புத்தகத்தில்
முடியவே முடியாது.
உன்னை மறக்கவும்
முடியாது. நீ எங்கோ வாழ்கிறாய்…
நானும் இன்னும்
வாழ்கிறேன்...
ஆனால்
நீ மறந்து விட்டு..
நான் இறந்து விட்டு... பூமியின் அடியில் வேர்களைத் புதைத்தாலும்,
காதலின் செடிகள்
காற்றில்
கிளைபரப்பும்...
நேசத்தை
ஒலிபரப்பும். வெறும் நேசமல்ல,
சாகா வரம் கொண்டது...
சாக முடியாது என
சாகசம் புரிகிறது,
மரணிக்க முடியாது என
மனதில் வாழ்கிறது,
கல்லறையில்
புதைத்த
என் காதல்...

✍️கவிதைக்காரன்.



இந்த கவிதையை என் குரலில் கேட்க 👇



https://youtu.be/cS7wfKlHp68

.
.
.
.
.
.

எழுதியவர் : கவிதைக்காரன் (3-Aug-25, 6:34 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 22

மேலே