வா வா என் அழகியே
அடியே சகியே
வா. வா என் அழகியே
என்னை ஏங்க விட்டவளே
என் நெஞ்சை தொட்டவலே
வானவில் வண்ணம் கொண்டு
என் வாழ்வில் வந்தவளே....
கரை தேடும் கப்பல் போல்
உனை தேடி அலைகின்றேன்
உன்னை நான் காணாமல்
நாள்தோறும் சிதைகின்றேன்
அலைபோல தொடர்கின்றேன்
அருவி போல் விழுகின்றேன்
எங்கெங்கோ உனை தேடி
என்னை நான் தொலைக்கின்றேன்
சிப்பிக்குள் முத்தை போல்
எனக்குள்ளே நீ வந்தாய்
எரிதனலாய் காதல் தந்து
எங்கேயோ பறந்து சென்றாய்
கூடு தேடும் பறவை போல்
உன் காதல் தேடும் பேதை நான்
என் காதல் பொறுத்த மட்டும்
சீதைகேற்ற ராமன் தான்...