வாழ்க்கைத் தத்துவம்

வாழ்க்கைத் தத்துவம்..
28 / 08 / 2025

மும்மூர்த்திகள் சொல்லும்
வாழ்க்கைத் தத்துவம்
பிரம்மனைப் போல்
படைக்கும் தொழிலில்
கண்ணாக - செய்யும்
கடமையில் கருத்தாக
வாழ்க்கையை
வாழ்ந்து விட்டால்
மாதவன் போல்
சுகமாக உறங்கி
பிறவி பெருங்கடலை
எளிதாய் கடந்து விடலாம்.
எல்லாம் இழந்து
வாழ்வின் எதார்த்த
உண்மைகள் புரியும்போது
ருத்ரனின் ருத்ர தாண்டவம்
ஆடி சுடுகாட்டில்
பிடி சாம்பலாய்
முடிந்து விடும்
இந்த வாழ்கையதன்
தத்துவம் சொல்லும்
மும்மூர்த்திகளின்
பாதம் பணிவோம்.
பாவம் தொலைப்போம்.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (29-Aug-25, 7:56 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 85

மேலே