மிரண்ட காடு
மிரண்ட காடு 
அடைத்த காரிருள்
அசையாத நிசப்தம்
உயிர் சலனங்கள்
அனைத்தும்
தூங்கி வழியும் நேரம்
வெளிச்ச புள்ளியாய்
தோட்டா ஒன்று
வெடி சத்தத்துடன்
தூங்கிய விலங்கின்
மீது பாய 
அது எழுப்பிய 
உயிர் வதை கூச்சல்..!
சட சடவென 
அத்தனை உயிர்களும்
எழுந்திட
முட்டி மோதி
பறந்த பறவைகளின்
பட படவென
இறக்கைகள் அடிக்கும்
ஓசை
மரங்களில்
கூக்குரலுடன் குரங்குகள்
அலறல்
நின்றும் படுத்தும்
உறங்கிய எல்லாம்
கத்தலும் கதறலுமாய்
கண் மண் தெரியாமல்
காட்டை கிழித்து 
ஓடிய ஓட்டம்..!
யாரோ ஒருவனின்
துப்பாக்கி தோட்டாவிலே 
ஓ..விழித்து 
மிரண்டு கொண்ட காடு

