உணர்வின் அடையாளம்

நினைவாய் வந்து
நிஜமாய் நிறைந்து
நீ போன தருணம்
நம் காதல் பிறந்தது.

மௌனத்தில்
பேசிய விழிகள்,
மனதில்
சொன்ன சொற்கள்
நீ சொன்னதில்லை.
நான் கேட்டதில்லை,
இதயம் கேட்டுவிட்டது.
இதமாய் சொல்லிவிட்டது
உயிரில் கலந்து விட்டது.

சில புன்னகைகள்
பல ஆண்டுகளையும் தாண்டும்.
நினைவுகளைத் தூண்டும் நிஜங்களையும்
என்னிடம் விட்டுச் சென்றாய்.

நான் வாழும் ஒவ்வொரு நாளும்
நினைவின்
பிரதிபலிப்பு,
கண்ணீரின் மறுபதிப்பு,
காதலின்
ஒலிபரப்பு...

உன் பாதையில் நடந்த
ஒரு நடைக்கே
மனம் முழுதும்
தொட்டு வைத்தாய்
உயிரை மட்டும்
விட்டு வைத்தாய்,
அந்த பாதையில்
நான் தினமும் நடந்துவைக்கிறேன்.
இன்னும்
அழுது வைக்கிறேன்.

தனிமையின் நடுவிலும்
உன் நிழல் மட்டும் நீங்கவில்லை.
அது நினைவுகளின்
சிறப்பு
என் கனவுகளின்
தலைப்பு.
.
நான் என்னிடம் பேசும்போதெல்லாம்
உன்னிடம் பேசுகிறேன்.
நான் எங்கிருந்தாலும்
நீயாகவே வாழ்கிறேன்.

உடலில்
நினைவுகள்
வாழ்வின் அடையாளம்
உயிரில்
உறவுகள்
காதலின் அடையாளம்
உன்னில்
கனவுகள்
என் அடையாளம்
என்னில்
உணர்வுகள்
உன் அடையாளம்.



✍️கவிதைக்காரன்.


இந்த கவிதையை என் குரலில் கேட்க கிழே உள்ள இணைப்பை பயன்படுத்தலாம்.

https://youtu.be/GVehjG_SzSo

நன்றி

எழுதியவர் : கவிதைக்காரன் (3-Aug-25, 1:18 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : unarvin adaiyaalam
பார்வை : 32

மேலே