உயர்த்திடு

உயர்த்திடு
03 / 08 / 2025

செய்த தப்பையே திரும்பத்திரும்ப
செய்கிறானே பாவி மனிதன்
பாடம் படித்தும் பலனில்லை
பட்ட அடியாலும் லாபமில்லை
என்ன செய்கிறான்? தெரியவில்லை
எதிர்காலம் அதுவும் புரியவில்லை
சமுதாயம் திருந்த வழியில்லை
திருத்தவும் ஒருவர் பிறக்கவில்லை
தானாய் திருந்தினால்தான் உண்டு
இளைய சமுதாயமே
முதலில் நீ திருந்து. .நீ திருத்து.
உலகமே உன் கையில்.
உரக்க சிந்தி. உரமென கலந்திடு
உன் வாழ்வை உயர்த்திடு

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (3-Aug-25, 8:09 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 29

மேலே