என் உயிர் ஆசை மகனே 555

அன்பு மகனே...

ஈரைந்து திங்கள்
உன்னை சுமக்க...

ஓடி ஓடி
வந்தவள்...

முதல் முறையாக நடை பழகினால்...

உன் அன்னை
உன்னை சுமக்க...

பார்ப்பதை அவள் ருசிக்கையில்...

உன் நலன் கருதியை ருசித்தாள்...

கருவில் இருக்கும்
உனக்காக...

உருவங்கள் மெல்ல
மெல்ல வளர...

நீ உன் பாதத்தாள்
வயிற்றில் எட்டி உதைத்தாய்...

எட்டி உதைக்கும் நேரமெல்லாம்...

வலியுடன் ரசித்தால்
உன் அன்னை...

நீ கருவில் எட்டி உதைக்கும் பாக்கியம்...

எனக்கு இல்லை...

உன் அன்னை சொல்ல கேட்டு ரசித்தேன்...

தினம் தினம் நான் உன்னோடு உரையாடுவேன் ...

என் குரல் கேட்கும் போதெல்லாம்...

உன் அசைவுகளை உன் அன்னை உணர்ந்தாள்...

உன்னை என்
கைகளில் ஏந்தவே...

கடல்
தாண்டி வந்து...

சில இரவுகள்
கண் விழித்து...

காத்திருந்தேன்
என் அன்பு செல்லமே...

நீ என்
கைகளில் வந்தாய்...

ஜூலை மலர்களை வெல்லும் பேரழகனாக...

ஜூலை மலர்களுக்கும் உன் மீது கோபம்...

பூமியில் இன்னொரு
பேரழகா என்று...

வாடாத நெய்
பூக்களைப் போல...

நீ சோர்ந்து விடாமல் வாழ வேண்டும்...

நெய் பூவை
சுமக்கும் பூமி போல...

உன்னை என்றும்
சுமப்பேன் உன் தந்தை...

என்
அன்பு மகனே...

இனிய உதய நாள் நல்வாழ்த்துக்கள்...

நேற்று தான் நான்
கைகளில் ஏந்தினேன்...

இன்றோடு ஏழாம் அகவையை எட்டி அடி வைக்கிறாய்...

என்
அன்பு மகனே...

உன் அன்பு
அப்பாவின்...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.....

--

***முதல் பூ. பெ. மணி.....***

எழுதியவர் : முதல் பூ. பெ. மணி (7-Aug-25, 5:36 am)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 112

மேலே