முதல் சந்திப்பு
அவளைப் பார்த்த
அந்த கணமே...
ஏதோ நடக்கப்போகிறதென
மனசு பயந்தது
அல்லது மகிழ்ந்தது…
அவன் தந்த பார்வையே
கண்ணில்
களிப்பாகிப் போனது,
மனதில்
மலையாகிப் போனது,
நெஞ்சில்
நிலையாகிப் போனது,
உணர்வில்
உயிராகிப் போனது.
அவள் மொழியில்
மழை கிளியாய்
பேசினாள்,
ஒரு புன்னகையில்
மனதை புத்திகமாய்
மடித்தாள்
இதழில்
நான் பேச,
அவள் பேசாமல்
போனாள்.
அமைதி கூட
அன்புதான்
என்றாள்.
மவுனம் கூட
மயக்கத்தான்
சொன்னாள்.
சில சொற்கள்
சின்னதாகத் தோன்றினாலும்,
அதில் ஒளிந்தது
பகிழ்வான மகிழ்வு.
“நண்பா”
என்றழைத்ததாள்
நெஞ்சம் தடுமாறிப் போனது,
கொஞ்சம் தடம் மாறிப் போனது
அவளுடன் பேசுவது
முழு நாளின்
முடிவாகிவிட்டது.
தன் கனவுகளை
பேசுகிறாள்
ஒவ்வொன்றும்
என் கனவில்
வந்து போகிறது.
அந்த கனவு
நினைவாகிறது
நினைவு நிஜமாகிறது
நிஜம் நெருக்கமாகிறது
நெருக்கம் நெருப்பாகிறது,
நெருப்பு பொறுப்பாகிறது.
பொறுப்பு காதலாகிறது.
மனம் பிரியாமலே
புரிந்துவிடுகிறது...
இந்த கவிதையில்
முதல் வரியின்
முழு அர்த்தம்,
இப்போதும் புரியவில்லை
என்றால் மட்டும்
இறுதி வரிகள்.
நட்பில் தொடங்கி,
காதலில் முடியும்
எல்லா உறவுகளிலும்,
முதல் சந்திப்பிலேயே
ஒரு மனதில்
காதல் பூத்து விடுகிறது.
✍️கவிதைக்காரன்.

