ஒரு பிடி சாம்பல்


யாருக்கு வேண்டுமானாலும்,

சொந்தமாகிப் போ...

எனக்குள் மூட்டிய

தீயை அணைத்து விடாமல்.



நீ மூட்டிய தீயில்,

நான்

இளைத்து

சிறுத்து

கருகி

வெந்து

காணாமல் போகிறபோது,



யாராவது

என் ஒருபிடி சாம்பலை

உன்னிடம் தந்தால்,

போனால் போகிறதென,

சுட்டு விரல் தொட்டு,

உன் அழகிய நெற்றியில்

மெல்லிய கீற்றாக்கினால்....



சந்தோஷிப்பேன்,

வாழ்ந்து விட்டேன்

என்று.

✍️கவிதைக்காரன்


வீடியோ வடிவில் பார்க்க 👇

https://youtu.be/ONBXrG1YMfY




.

.

.

எழுதியவர் : கவிதைக்காரன் (6-Aug-25, 11:43 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : oru pidi saampal
பார்வை : 36

மேலே