பூக்காரன் கவிதைகள் - பைராகி - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : பூக்காரன் கவிதைகள் - பைராகி |
இடம் | : நீலகிரி - உதகை |
பிறந்த தேதி | : 14-Feb-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 5231 |
புள்ளி | : 1982 |
காலக்கரையில் கால் நனைத்தபடி நீளநடக்கிறேன், அலைத்தொடும் அருகலில் என் சுவடுகள் இருக்கின்றன கவிதைகளாக, நாளாந்தமான புதுவிதிகளின் பிறப்பில் என் சுவடுகளில் சில நிலைத்தும் சில அழிந்தும் காண, எஞ்சியவற்றில் வாழ்ந்திருப்பேன் "பூக்காரன் கவிதைகள்"
இரவுநேரம் வேப்பம்பூ இளம்பூக்கிற போது
அது மரத்தில இருக்கிறபோது
காற்றத்து சமயம்
மென்காற்றுப்பட்டு ஒரு வாசம்
கொடுக்கும் நுகர்ந்திருக்கிங்களா ? சமூகம்.
சில ஆண்களே பிரியப்பட்டு
ஒருக்கைப்பிடி
சட்டைப்பையில் வைத்துக் கொள்வார்கள் .
நுகர்ந்து பார்க்கிற நொடி
ஒவ்வொரு ஆணும்
மூக்குப்புடைக்க
கழுத்து நரம்புப் புடைக்க
கண்கள் மூடி
முகம் சிவந்து அழகாகிறார்கள்.
அடுத்தமாசம்
இந்த ஊருல வேப்பம்பூ பூக்கும் .
கைவிட்டுப்போன வருடங்களை
நினைத்தாலே சந்தோஷமா இருக்கும்
சில வேப்பம்பூ நினைவுகள் சமூகம்.
ஒருவர்க் கண்ணிலும் விழாமல்
அதில் நான் வாழ்ந்துகொள்வேன்
பைராகி
பூக்கள் பூக்கும் தருணம்
(கடிதப் பதிவு)
கோவை காந்திபுரம் முன்ன இருந்த ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி டவர் , இப்போ கணபதி சில்க்ஸ் இருக்குங்க தோழர் , காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டான்ட் க்கு எதிர்த்தாப்புல சிம்ம சொப்பனமா இருக்குமுங்க தோழர்.
காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டான்ட்.
விற்றுதீர்ந்த, விற்பனை ஆகாத மல்லிகை முழங்களுக்குள் மறைந்த காதல், கோபம், பிடிவாதங்கள், தலைமுறைகளாக, கேலிகள் சுமந்த கற்களாலான இருப்பிடங்கள், தள்ளுவண்டி காளான் கடைகள்,
என்றோ சுவரில் கிறுக்கப்பட்ட, அடையாளம் தொலைத்த, பழைய அலைப்பேசி எண்கள், தவறவிட்டவைகளை தேடிக்கொண்டிருக்கும் பழைய சிலர், பேருந்திற்காக காத்திருக்கும் சுமதலைகள், அப்போதுதான்
ஒரு "Introvert" நானல்லவா (Diary 1999)
--------------------------------------------------------------------
///புத்தமதம் சுவீகாரம் செய்தபின்பு அசோக சக்ரவர்த்தியிடம்
அபரிமிதமான
மாற்றங்கள் தெரிந்தன.
ஒரு இராஜாவிற்கான வினோதங்களையும்
சுகபோகங்களையும்
வேண்டாமென அவர்
ஒவ்வொன்றாக
விடுத்துக் கொண்டிருந்தார்.
எனச் சொல்லிக் கொண்டிருந்தேன் .
உன் சரிகமபதநி என் இலாவண்யத்தின்
திசைமாற்றுகிறது.
சப்தித்துக் கொள்ளமாத்திரம்
ஒரு குரல்
உலகத்தில் படைக்கப்படாததை
இந்த இயற்கை
அறிவித்துக் கொண்டிருக்கிறது.
மனதளவிலிருந்த
உன் மீதான என் இரகசியங்களை
அது திரையவிழ்த்துக் கொண்டிருக்கிறது.
ம
கருணை மலர் - 02
இயற்கை ஏதேனும் அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கும்.
அப்படித்தான் என்றென்றும் மாறாத பிரபஞ்ச அதிசயம் நீ.
பயணத்திலும் வாழ்க்கையிலும்
ஒற்றைப்பட்டுப் போவது
எனக்குப் பிடித்திருக்கும்.
பேசுவதற்கும் பழகுவதற்கும்
நிறைய நேரங்கள் இருக்கும்.
கொஞ்சம் போயி பேசிருக்கலாம்தான்
பழகி இருக்கலாம்தான்
ஏனோ அதில்
கொஞ்சமாக குறைவைத்து
விலகிவிடவேண்டுமாய்த் தோன்றும்.
பெரிதாக ஏதும் சொல்லிக் கொள்ளாமல்
அருகவும் செய்யாமல்
தீராவெறுப்பாக இருந்துவிடாமல் அங்கங்கே நினைவுக் கொத்திப்போகிறேன்
அடையாளங்கள் ஏதுமின்றி.
இப்போதெல்லாம் நாம்
ஒருவரை ஒருவர்
சந்தித்துக் கொள்வதே இல்ல
அம்மா வந்திருக்கிறாள்
-----------------------------------------------
நவநீதாவை அழைத்திருந்தேன்
வழக்கம்போல வீட்டுக் காரியங்களை,
தோட்டக் காரியங்களைப் பேசி முடிச்சிட்டப் பிறகு அம்மா அன்று சொன்னது நினைவிற்கு வந்தது.
ரமேஷ் அண்ணாவிற்கு பணம் அனுப்பியாச்சா எனக் கேட்டேன்.
இதோ கொஞ்சம் முன்னாடிதான் போன்பே நம்பர் வாங்கி இருக்கேன்
அனுப்பிடறேங்க என்றாள் .
ரமேஷ் அண்ணன்
தாய் தந்தை வைத்தப் பெயர் ஸ்ரீனிவாசன். எனக்கு தாய் மாமன் மகன்.
போனமுறை பெரியம்மாவைப் பார்த்துவிட்டு அதிகநாட்கள் கழித்து அம்மா வந்திருந்தாள்.
வந்ததிலிருந்து அவள் முகம் ஏதோபோல் இருந்தது.
அவளிடம் அதைப்பற்றிக்
இனியவளுக்கு - தசாப்தம் பிளஸ்
================================
"இதயம் திறந்தநாள் (திருமணநாள்) வாழ்த்து" -
அவளை அதிகம் நேசிக்கிறேன்
அவளை அதிகம் யாருக்கும் அறிமுகப்படுத்தியதில்லை
அவள் அழகிகளின் அழகி
அவள் பூக்களை விரும்புகிறவள் அல்ல
அவளை பூக்களோடு ஒப்பனைச் செய்வதில்லை நான்
அவள் மொத்தப் பூக்களுடைய தனிப் பிரபஞ்சம்
அவள் எல்லாப் பூக்களுடை ஏழு பருவங்கள்
அவளாவன அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்
-என் காலத்திற்கு பின்னாலான அவள் நிலை செம்மல்-
அவளுக்கு கவிதைகள் தெரியாது
அவளைப்பார்த்தால் கவிதைகள் விழும்
அவளுக்கு பாடல் வராது
அவளைப்பார்த்தால் இசை அரும்பும்.
அவள் நேசம் சொல்வதறியா
"இஸ்"
======
குட்டி என்ன பண்றீங்க
படுத்துக்கிடக்கேன்
அப்படியா, குட்டி சாப்பிட்டீங்களா
ஆமா ம்ம்
எழுந்திருக்க மடி, உறக்கமே வருது
இப்படியே
தூங்கிட்டிருந்தா
இன்னும் ரெண்டே மாசந்தான்
அப்பறம் குண்டாகிடுவீங்க,
ஆமா
இப்படி தூங்க என்ன சாப்பிட்டீங்க
தயிர்சோறு
ராகிக்கூழ்
உடம்பிளைக்கிறேன் என்றவனுக்கு
ஆசை ஊக்கி ஆகிறாயே
சுடுசோறு மீதும் கெட்டித் தயிர் மீதும்
நாவின் மோகம்
மோசம்போகிறதே
பரவால்லை
நீ கட்டிப்பிடிக்க அதே வயிறு உனக்குக்கிடைக்குமே
என்கிறாய்
காதல் விரும்பும் குழந்தை ஒருத்தி
கோபிக்கத் தெரியாது டா
என்று சொல்லுவதைப்போல
குட்டிக்குட்டியாய், விட்டுவிட்டுக் கோபிக்கிறாள்
நகைப்பூட
கவிதையே தெரியுமா - கண்ணம்மா கவிதைகள்
****************************************************************
ஒண்ணு கேக்கட்டா ம்ம்
நான் வடநாட்டுப் பொண்ணு
எனக்கு புடவை கட்டணும்னு ரொம்ப ஆசை
ஆனா கட்டத் தெரியாது
எனக்கு புடவைக் கட்ட சொல்லித் தாரியா ம்ம்
நான் தப்புத் தப்பா தமிழ் பேசறேனா ??
எனக்கு தமிழ் பேச சொல்லித்தாரியா ப்ளீஸ் ,,
நீ என்கிட்டே பேசிக்கிட்டே இருடா
என்னைவிட்டுப் போயிடாதே
என் கண்கள் என்னை உள்ளிழுக்கின்றன
நீ பேச பேச
அவை உன்னையும்
மின்மினிப் போல
வெளிச்சமுள்ள உன் கண்களையும்
என் கனவுக்குள் இழுத்திடும் ம்ம்
என் அசதி இந்த படுக்கையை
மெல்ல அழுத்துது நான் உணருறேன்
என்
ஒரு 18 ஆம் தேதியின் டைரி உளறல்கள்
அழகில்லாதப் பெண்களை அன்னையாக ஏற்கும் ஆண்கள்
அழகில்லாதப் பெண்களை
தங்களுடைய மனைவியாக ஏற்காதது ஏன் ..
சில வலிகளை சுமந்து கடப்பதைவிட
யாருமற்ற பயணத்தில்
உதிர்த்துப் போகலாம்
அன்றுகாலை சொந்த ஊரிலிருந்து கெளசல்யா அழைத்திருந்தாள்
செல்வியின் இறப்பை அறிவிக்க
அவ செத்ததுதான் சரி .. தாவணிப் போட்ட காலத்திலிருந்து தலைக்கு மல்லிகைப்பூ வச்சா எங்க அந்த வாசனை கல்யாண ஆசையைக் கொடுத்திடுமோ .. இந்த முகத்தை
எவனுக்குப் புடிக்கும் னு யோசிச்சு யோசிச்சு
பாக்கவர்ற ஒவ்வொருத்தன் முன்னாடியும்போயி அவஞ் சிரிக்க கூட ஊர் சிரிக்க நின்னு .. பட்டதெல்லாம் போக
இன்னுமொரு
தொட்டக்குறை விட்டக்குறை - 4
==============================
அப்பொழுதெல்லாம் எனக்கு
அதிகமாய்ப் பேசி
பழக்கமில்லை
நீதான் எல்லாம் கற்றுக் கொடுத்தாய்
ஏதோ
தனியா பேசணும்னு சொல்லி
அழைத்திருந்தாய்
நீ கூட இருந்தப்போ
அப்பாக்கிட்ட இருந்து
கால் வருது
அன்னைக்குத்தான்
முதல் முதலா
அவர்க்கிட்ட ஒரு பொய் சொல்றேன்..
பேசி,
செல்ஃபோனை
அணைத்திட்டப் பிறகு
சிரிச்சுகிட்டே
ம்ம் மேல சொல்லுன்னு
சொன்னதும்
நீ ஆச்சர்யமாப் பாத்த,
காஃபி குடிக்கணும்போல இருந்துச்சி,
சின்னதா தூறல் அடித்தது
நாம் இருவரும்
ஒரு காஃபி ஷாப்புக்குள் நுழைந்திருந்தோம்
நம்மைத் தவிர
அங்க யாருமில்லை
நான் ..
அருகில
அனுராகவிலோச்சனதாரி
===========================
பக்கம் வா என்றுவிட்டு,
இதழ்கள் ஒவ்வொன்றாய்ப் பீய்த்துக்கொன்று வருடி
உயிர்க்கதைக் கொல்லுகிறாய் ..
ஒளிப்பூட்டல் விடுகதைச் சிரிப்பு,
வீட்டுச்சாலை பாததனம்,
ஒளி எழுதிய கனவுக்கண் அனுகவிதை,
வாழ்க்கை இழுக்கும் கால அச்சாணி,
காணாமைத் தளர்வு,
தனிக்காற்றுக்கால சருகுசாதன சாந்திரிகைப் பொலிவு,
//""உன் வெட்கத்தை எல்லாம்
உனக்கேத் தெரியாமல்,
நிறையமுறை என் கவிதைகளில் சேர்த்துவிட்டேன்
ஆதலால்,
அது இப்போது வேண்டாம் ம்
முதல் மோதிரம் விரல் தொடும்போது
முகம் திருப்பிக் கொண்டாய்,
இரவு உடைந்த காதணிப் புலம்பல்கள்
கால்குத்திக் குரலா
அம்மா நிறம் எனக்குத் தெரியாது, அப்பாவும் அக்காவும் அவள் நிறத்தை எவ்ளோ வர்ணித்தாலும், என் யூகங்களைத் தாண்டி அவளுடைய நிறம் பற்றி எனக்கு திருப்தியே இருந்ததில்லை.. விபரம் தெரியாத வயதின் பகலொன்றில், என் ரூம் படுக்கையில் ..சாஞ்சதுபோல அந்த ஆல்பம் பார்த்துக்கிட்டிருந்தேன்.. அப்பா அந்த சோஃபா ல உக்காந்து பேப்பர் படிச்சுக்கிட்டிருந்தாரு ..அந்த ஆல்பம தூக்கமுடியாம தூக்கிட்டு போயி .. அவளைக் காட்டி.. ஏன்பா இதெல்லாம் கருப்பு வெள்ளையா இருக்குன்னு கேட்டேன்... அதுக்கு அப்பா சொன்னாரு
"அப்போது நிறங்களெல்லாம் அங்கேயேதான் இருந்தன... நாங்கள்தான் பின்தங்கியிருந்தோம்" ன்னு...
அவரோட கடைசிக்காலம்வரைக்கும் ,,