கவிமலர் யோகேஸ்வரி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  கவிமலர் யோகேஸ்வரி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Apr-2018
பார்த்தவர்கள்:  896
புள்ளி:  995

என்னைப் பற்றி...

நெஞ்சை அள்ளும் தமிழினை கொஞ்சி குளவிட வேண்டுமே...!!!

என் படைப்புகள்
கவிமலர் யோகேஸ்வரி செய்திகள்
கவிமலர் யோகேஸ்வரி - கவிமலர் யோகேஸ்வரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2019 6:53 pm

முடிவில்லா
நெடும்பயணம்
முதல் காதல்......!

மேலும்

நன்றி 09-May-2019 9:39 pm
உண்மை ! 07-May-2019 2:37 pm
கவிமலர் யோகேஸ்வரி - கவிமலர் யோகேஸ்வரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Apr-2019 2:50 pm

தேடுகிறேன் உன்னை அதிகமாக...
நீ தொலைந்த பிறகு அல்ல
நீ எனக்குள் நுழைந்த பிறகு....!!

மேலும்

நன்றி 25-Apr-2019 6:52 pm
arumai 25-Apr-2019 4:51 pm
கவிமலர் யோகேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2019 9:45 pm

யாரும் பாரா
தூரம் சென்று
நேரம் போகா
காலம் அமைத்து
உன் ஒற்றை நினைவில்
உலகை மறந்து
இரு இமைக்கு இடையில்
முளைக்கும் கனவாய்
நீ எனக்குள் தினம்
உதிரா மலராய்
பூத்திட வேண்டும்
இவ்வுயிர் மறந்து
நான் இறப்புற நீ
அருகினில் வேண்டும்
உன் மடி எனை
தாங்கிடும் கணம் போதும்...!!!

மேலும்

கவிமலர் யோகேஸ்வரி - Revathy S அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Apr-2019 1:04 am

காதல் என்பது புரியவில்லை
உன்னை நான் பார்க்கும்வரை
சுவாசம் நிற்பதை அறிந்ததில்லை
உன் கண்கள் என் கண் வருடும்வரை
கைகள் பேசுமென அறியவில்லை
உன் கைகள் என் கை பிடிக்கும் வரை
செவிகள் மகிழ்வதை அறிந்ததில்லை
உன் கொஞ்சும் மொழிகளை கேட்கும் வரை
தென்றலின் சுகமும் அறிந்ததில்லை
உன்னுடன் திடலில் நடக்கும் வரை
மழையின் அழகு தெரியவில்லை
உன்னுடன் நானும் நனையும்வரை
நேரத்தின் அருமை புரியவில்லை
உன்னுடன் நேரம் கழிக்கும்வரை
பிரிவின் வலியும் தெரியவில்லை
உன்னை நான் பிரிந்தவரை
காலத்தின் அருமை தெரிந்ததில்லை
உன் சந்திப்பிற்கு காத்திருக்கும் வரை

மேலும்

மிக்க நன்றி! 23-Apr-2019 4:13 pm
அருமையான வரிகள்... கைகள் பேசுமென அறியவில்லை உன் கைகள் என் கை பிடிக்கும் வரை 22-Apr-2019 9:42 pm
வாழ்த்துகள் 20-Apr-2019 7:07 pm
மிக்க நன்றி! 20-Apr-2019 5:46 pm
கவிமலர் யோகேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2019 10:08 pm

அன்போடு நீ பார்த்த அந்த
ஒரு நொடி பார்வை...
ஆசையோடு நீ அணைத்த
அந்த ஒரு நொடி நெருக்கம்...
இன்பத்தோடு நாம்
பேசி களித்த அந்த ஒரு
நொடி மொழி
ஈரெழு ஜென்மத்துக்கும்
நீ வேண்டும் என நகர்ந்த
அந்த ஒரு நொடி நேரம்
உன்னோடு மட்டுமே வாழ்ந்திட்ட
அந்த ஒரு நொடி வாழ்க்கை
ஊர்சுற்றி பிறகு
உன்னை சுற்றி வந்த
அந்த ஒரு நொடி பயணம்
எங்கிருந்தாலும் என்னை
வந்து சேர்ந்திடும் ஒரு
நொடியில் உன் நினைவு
ஏக்கங்கள் ஏராளமாய்
கொடுத்திடும் உந்தன்
ஒரு நொடி பிரிவு
ஐம்புலன்கள் என்னில்
இயங்கிட செய்திடும்
உந்தன் நொடி நேர அசைவு
ஒத்தையாக வாழ்ந்த மனதில்
நீ வந்து ஒட்டிய நொடியில்
ஓடை நீரும் தேனோடை ஆக
ஔவை மொழியில் ஆயுள் கூடி
ஃ - என தொடங்கி அ

மேலும்

கவிமலர் யோகேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2019 10:02 pm

நிலவின்
முற்றத்தில்
உன் கால் தடம்
என் கனவின்
ஓரத்தில்
உன் புகைப்படம் என் இதயம்
முழுக்க உன்
நினைவுகளே தென்படும்....!!

மேலும்

கவிமலர் யோகேஸ்வரி - Sana அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Apr-2019 7:27 pm

பார்த்தது சில நாள்
பேசியவை மிகச்சில
AAனால் எழுத எழுத
யுகங்களானாலும்
நிற்காது என்
கற்பனை குதிரை...
அதற்கு கடிவாளம்
உன் கையில் அல்லவா இருக்கிறது...
உன் நினைவுகள் தந்த பரிசே
என் கவிதைகள்....
கண்ணால் கண்டதும் மெய்...
காதால் கேட்டதும் மெய்
உன்னைப்பற்றி எழுதியதும் மெய்
நீ மட்டும் பொய்யாய்....
நினைவுகளில் மட்டும் .......

மேலும்

அருமை 15-Apr-2019 9:14 pm
கவிமலர் யோகேஸ்வரி - Saranya k அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Dec-2018 7:40 pm

தண்ணீர் என்னும் தனிமையிலிருந்து
கண்ணீர் என்னும் பெயரில் சேர்ந்து
பிரிவு என்னும் வலியில் பிறக்கிறது
"கண்ணீர் துளிகளின் காதல்"

மேலும்

அருமை...! 12-Dec-2018 1:13 pm
கவிமலர் யோகேஸ்வரி - சுடர்விழி ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jul-2018 6:21 pm

உன் அகந்தையின் அடிமனதில் ஓர் அகிம்சை எதற்கு
என்னை காதலெனும் கருணைக்கொலை செய்யவா??

இருவிழி தந்த
இறைவனிடம்கூட இறுமாப்பு கொள்கிறேன், உன் கடைக்கண் பார்வைக்காய்..

பஞ்சத்திற்கு மழை பனிபோல என்பார்களே --
என்
நெஞ்சமது மகிழ
சிறுபுன்னகை சிந்தமாட்டாயோ??

உனக்கென ஓர் கவிக்காக,
உலகெலாம் சுற்றினேன் ..
கிடைக்கவில்லை
களவாடியது
யார் ??
அந்த காற்றா....
இல்லை இவையாவும் என் கற்பனையா??
திடுக்கிட்டு விழித்தேன்...
பட்டாம் பூச்சிக்காரனே!!
கனவிலும் என் நினைவில் நீயே..

மேலும்

நன்றிகள் ஐயா...நிச்சயமாக... 09-Aug-2018 3:54 pm
அருமையான கற்பனை. தொடருங்கள். 05-Aug-2018 10:02 am
கவிமலர் யோகேஸ்வரி - Saranya k அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jul-2018 5:52 pm

உன்னை காணாமல் கண்ணீரில் புள்ளி வைக்க
உன் நினைவு என்னை இழுத்து வளைத்து கோலம் போட வைக்கிறதே...!!!

மேலும்

நன்றி... 23-Jul-2018 7:47 am
நீங்கள் நன்றாக கண்ணீரை வர்ணிக்கீறீர்ள் அருமை....உங்கள் காதலின் ஆழம் உணர்த்தும் வரிகள்...அருமை 22-Jul-2018 6:55 pm
கவிமலர் யோகேஸ்வரி - Saranya k அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jul-2018 10:12 am

கண்களால் பேசிய மொழிகளினால்
கனவினில் கண்கள் களைய
கண்ணீரில் அர்த்தம் கண்டேனே...!!!

மேலும்

இனிது இனிது உமது கொள்கை இனிது அழகு தமிழ் பதுமையே!!! 22-Jul-2018 2:31 pm
நன்றி... 22-Jul-2018 10:35 am
நன்றி...இல்லை என் கண்ணீர் மூலம் தமிழை உயர்த்துவேன்.... 22-Jul-2018 10:35 am
அருமை அருமை தமிழே கண்ணீரின் வலிகள் உணர அதில் மூழ்கிட வேண்டுமா எனன இன்னும் எழுதுங்கள்... 21-Jul-2018 10:40 pm

இத்தனை நாள் உன்னை பாராமலும் பார்க்க முடியாமலும்
தவித்தேன் இன்னும் எத்தனை நாள் இவ்வாறு ஏங்கி தவிப்பேனோ.....மீண்டும் உன்னை கட்டி அணைப்பதற்க்குள்
ஏறக்குறைய இறந்து விடுவேன் என்பதை போல் உணர்கின்றேனடா.....நீ என் நிலைமை புரிந்து நெருங்கி என் அருகில் வருவாயோ.........இல்லை என்னை விட்டு விலகி சென்று என்னை கொள்வாயோ............

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (35)

user photo

viswa

None
அருண்

அருண்

இலங்கை
சத்யா

சத்யா

Chennai
user photo

ஆஸ்மி

நாகர்கோவில்
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்

இவர் பின்தொடர்பவர்கள் (36)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (37)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

வாழ்க தமிழ்

காஞ்சிபுரம்

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே